வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், நீதித்துறை அதிகாரிகளுடன் 2023ல் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் பைடன் சில விஷயங்களை மறந்து குழப்பமாக பேசியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக, அவர் துணை அதிபராக இருந்தபோது எப்போது பதவி விலகினார், மகன் பியூ எப்போது இறந்தார் போன்ற விவரங்களை சரியாக சொல்ல முடியாமல் தடுமாறியுள்ளார். இந்த ஆடியோவை Axios என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது. பைடன், ஒபாமா ஆட்சியில் இருந்தபோது ரகசிய ஆவணங்களை வைத்திருந்தாரா என்பது பற்றி 2023ல் விசாரணை நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட ஆடியோ இது. சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் ஹுர் மற்றும் அவரது குழுவினர் இந்த விசாரணையை நடத்தினார்கள். ஆனால், பைடன் மீது எந்த குற்றமும் இல்லை என்று ஹுர் கூறினார்.
பைடன் ஒரு நல்ல எண்ணம் கொண்ட, வயதான மனிதர், அவருக்கு ஞாபக சக்தி குறைவு என்று ஹுர் பிப்ரவரி 2024ல் தெரிவித்தார். ஆனால், பைடன் ரகசிய ஆவணங்களை வைத்திருந்தது உண்மைதான் என்று ஹுர் ஒப்புக்கொண்டார். இந்த ஆடியோ எப்படி Axiosக்கு கிடைத்தது என்று தெரியவில்லை. ஆனால், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த ஆடியோவை வெளியிட திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த விசாரணையின் எழுத்துப்பூர்வமான அறிக்கையை நீதித்துறை வெளியிட்டது. ஆனால், ஆடியோவை வெளியிடாமல் இருந்தது. தற்போது பைடனின் உடல்நிலை சரியில்லை என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது இந்த ஆடியோ வெளியாகி உள்ளது.
இந்த ஆடியோவை கேட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை மறைக்க சதி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறியுள்ளனர். பைடன் அவர் தனது கடமைகளை செய்ய முடியாத நிலையில் இருந்தார். அப்படியானால் யார் ஆட்சி செய்தது? யார் இதை மறைக்க சதி செய்தது? என்ற கேள்வியை பலர் எழுப்பியுள்ளனர். அக்டோபர் 2023 முதல் நடந்த எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
அதே நேரத்தில் பைடனுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆடியோவை கேட்டதும் எனக்கு அழுகை வந்தது. பைடனுக்கு நெருக்கமானவர்கள் மனிதநேயத்தை இழந்துவிட்டார்கள். அவர்கள் அவரை கவனித்திருக்க வேண்டும். அவரை பற்றி யோசித்திருக்க வேண்டும். அவர்களின் கோழைத்தனத்தால் பைடனின் ஆட்சி ஒரு வெற்றிடம் என்று வரலாறு எழுதும். பைடனின் கருத்துக்களை நான் எதிர்க்கிறேன். ஆனால், நமது நாட்டிற்காக, பைடனுக்காக, ஜனநாயகவாதிகள் தைரியமாக செயல்படாதது வருத்தமாக உள்ளது. பைடனின் ஆட்சியின் இந்த சோகமான காலத்திற்கு ஜனநாயக கட்சியினரே காரணம். இது அமெரிக்க வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக இருக்கும் என்று ஒருவர் கூறியுள்ளார்.
இது ஜனநாயக கட்சியினருக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே பைடனின் உடல்நிலை குறித்து பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆடியோ மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த ஆடியோவை வெளியிட்ட Axios, இது பைடனின் உடல்நிலை குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்று கூறியுள்ளது. மேலும், இந்த ஆடியோவை வைத்து குடியரசு கட்சியினர் பைடனை கடுமையாக விமர்சனம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போதே ஜோ பைடன், டிரம்ப் கலந்து கொண்ட விவாதத்தின்போது தடுமாறிய நிலையில்தான் காணப்பட்டார் பைடன். மேலும் விவாதத்தின்போது அவர் தூங்கவும் செய்தார். மேலும் உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின்போது அவர் பாட்டுக்கு நடந்து சென்றதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஆடியோ, ஜனநாயகக் கட்சிக்கு கடும் பின்னடவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!
ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து
அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா
அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!
அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்
அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி
தொடர் உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}