- க.யாஸ்மின் சிராஜூதீன்
தூய்மையான காற்று நமக்கு உயிர் மூச்சு
பூமி பந்தை சிரிக்க வைக்கும்
உயிரோட்டமாச்சு
ஆரோக்கியத்தின் ஆணிவேராச்சு
கிராமத்திலே காடு மேடு
வயல் வெளி
சந்துபொந்து என தங்கத் தேரில் உலாவருகுது
ரொம்ப மகிழ்ச்சியாக தென்றலாய் வீசுது
மனிதனும் சிரித்து வாழுறான்
நோய்நொடிய விரட்டி அடிக்கிறான்...
காற்றின் சலசலக்கும் இசையில்
பூமித் தாயும் மகிழுது

நம்மை பச்சை பட்டாடையால் அரவணைக்குது
விஞ்ஞான வளர்ச்சி என்று நகரமயமானது
மரமெல்லாம் வெட்டி வானுயர கட்டிடமானது
தொழிற்சாலை பெருகி
கட்டுப்படுத்தாமாசு
காற்றில் கலக்குது
வாகனப் புகை குபுகுபுவென வெளியேறுது
தூய காற்றில் கலக்குது
நாம் தூயகாற்றுக்கெங்கே போவது
இருப்பதை சுவாசிக்குறோம்
நோய்நொடிய பெருக்குறோம்
வாழ்நாள் வீதம்தானாக குறையுது
யாரை தப்பு சொல்வது
ஆடம்பரம் நம்மை ஆட்டிப்படைக்குது
காடு கட்டாந்தரையானது
நாடு தூயகாற்றுக்கிங்கே ஏங்குது
பூமித் தாயும் வாடித்தான்
பசுமை இழந்து அழுகுது
என்பிள்ளைகளை எப்படி காப்பேன் என கலங்குது
நீரை போல என் மக்கள்
காற்றையும் விலைக்கு வாங்கும் நிலை வந்திடுமென
புலம்புது
தன் பிள்ளைகளிடம் கோரிக்கை வைக்குது
மாசற்ற காற்று நமக்கு வரம் என்குது
அதை காப்பது நம் கடமையென உரைக்குது
வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம்
தூய காற்றை நாம்பெறுவோம்
மாசற்ற உலகம் தான்
நமக்கு இங்கே சொர்க்கம்தான்
நிலம் நீர் காற்று நமக்கு உயிர் மூச்சு
மாசு தவிர்த்து மரங்களை வளர்ப்போம்
தூயகாற்றை சுவாசித்து
ஆரோக்கியம் காத்து வாழ்வோம்..
மரம் தான் நமக்கு நண்பன்
உயிர் காக்கும் தோழன்..
ஆரோக்கியத்தின் தாய் அல்லவா ...!!!
மாசு குறைத்து மீட்டிடுவோம் தூயகாற்றைதான்..!!!
அதை சுவாசித்து வலம் வருவோம்
பூமித் தாயின் மடியில் தான்... !!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
{{comments.comment}}