- ஹைதராபாத் தனலட்சுமி
சின்ன முயற்சி முதல் உலக வெற்றிவரை.. எதுவாக இருந்தாலும், பொறுமையே அடித்தளம்!
"வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறீர்களா?".. அப்படி என்றால், முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது பொறுமை என்பதை நமது பாரம்பரியத்திலேயே வலியுறுத்தப்பட்டுள்ளது. பொறுத்தார் பூமிஆள்வார் என்ற பழமொழி இன்றும் காலத்தைக் கடந்து நம்மை வழிநடத்துகிறது.
இதை ஒரு கதையின் மூலம் நாம் பார்ப்போம்.. அது என்ன கதை?.. அதுதான் விதையின் பயணம்.. ஒரு விதை எப்படி தனது வாழ்க்கையை தொடங்கி வெற்றி பெறுகிறது..?

ஒரு சிறிய விதை மண்ணில் விழும் போது, அது உடனே மரமாக மாறுவதில்லை. மழை, காற்று, வெப்பம் போன்ற இயற்கை சவால்களை சகித்து, பல நாட்கள் பொறுமையோடு வளர்கிறது. தன்னை மூடிக் கிடக்கும் மண்ணை மெல்ல மெல்ல உந்தித் தள்ளி முட்டி மோதி வெடித்து வெளிக் கிளம்பி வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது. காலத்தால் சோதிக்கப்பட்ட பிறகு, அது ஒரு பெரும் மரமாக வேரூன்றி நின்று உலகிற்கே நிழல் தருகிறது.
சாதாரண விதைக்கே இத்தனை கஷ்டம் என்றால் மனிதர்களுக்கு எத்தனை சவால்கள் வரும்.. மனிதனின் வாழ்க்கையும். சிறு முயற்சிகள், தவறுகள், தோல்விகள் அனைத்தையும் பொறுமையோடு சமாளிக்க முடிந்தால் மட்டுமே, வெற்றியின் உயரத்தை அடைய முடியும்.
பல வெற்றிக்குரிய தலைவர்களைப் பார்த்தால், அவர்கள் ஒரே நாளில் வெற்றி பெற்றவர்கள் அல்ல என்பதை உணரலாம்.. உதாரணமாக, மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை ஒரு தொடர் முயற்சி மற்றும் பொறுமையின் அழகான கதையே. தொடர் தோல்விகளுக்கும் இடையே, அவர் விடாமல் முயற்சித்து; இந்தியாவின் முன்னணி விஞ்ஞானி மற்றும் மக்களின் ஜனாதிபதியாக மாறியவர்.
இளைஞர்களுக்கு மாபெரும் ரோல் மாடலாக விளங்கியவர். மாணவர்களுக்கு மிகப் பெரிய ஆசானாக, உந்து சக்தியாக விளங்கியவர். அவரது வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் பலர்.
கலாம் என்ற ஆலமரம் ஒரே நாளில் வந்தது அல்ல.. பல கஷ்டங்களையும், அசராத முயற்சிகளையும், விடா முயற்சியையும், கடினமான உழைப்பையும் அறிவையும் பயன்படுத்தி போராடி வந்ததுதான் கலாம் என்ற சக்தி. எனவே சிறு சிறு முயற்சிகளை தொடர்ந்து செய்யவும், தடைகளை பொறுமையோடு கடக்கவும் பழகினால், வெற்றிப் பயணம் நிச்சயம் சாத்தியமாகும்.
பொறுமை என்பது வெறும் நல்ல குணமல்ல, அது ஒரு சக்தி! அதையே நம்பி தொடர்ந்து பயணிக்கும்பவர்கள், ஒரு நாள் உலகையே தங்களது பாதையில் கொண்டு வருவார்கள். அதை தான் நம் முன்னோர்கள் எப்போதும் சொல்லி வந்துள்ளனர்.
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
தேடல்!
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
மார்கழி திங்கள் பிறந்ததம்மா!
{{comments.comment}}