சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என்பதால், தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். இதனால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
இன்று அதி கன மழை(ரெட் அலர்ட்):

நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யக் கூடும் என்பதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று மிக கனமழை(ஆரஞ்சு அலர்ட்):
தேனி, தென்காசி, திருநெல்வேலி, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை:
திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் இன்றும், நாளையும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
{{comments.comment}}