வேலை நேரம் முடிஞ்சிருச்சா.. முதலாளி போனை  Attend பண்ண தேவையில்லை.. செம சட்டம்.. எங்கே தெரியுமா?

Feb 08, 2024,05:09 PM IST

சிட்னி:  வேலை நேரம் முடிந்த பிறகு, முதலாளி போன் செய்தால், அதை நிராகரிக்கும் வகையிலான புதிய சட்டத்தை ஆஸ்திரேலியா அரசு கொண்டு வந்துள்ளது.


வளர்ந்த நாடு, வளரும் நாடு என அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றால் கூட, சில அவசர வேலைகளுக்காக வேலை பார்க்கும் நிலை உள்ளது. சில வேலைகளை வீட்டில் இருந்து செய்து கொடுப்பதும்,சில வேலைகளுக்காக மீண்டும் அலுவலகத்திற்கு சென்று அந்த வேலையை முடித்துக் கொடுக்கும் நிலையும் ஏற்படும். 


இது கூட பரவாயில்லை பாஸ்.. இதை விட கொடுமையெல்லாம் நடக்கும் பாருங்க.. ஹய்யோ.. !


சிலர் மனைவி குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு போக வேண்டிய சூழல் ஏற்படும் போது மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக எங்காவது போக முடிவு செய்திருக்கும் நேரத்தில் கூட அலுவலகத்தில் இருந்து போன் வந்து  அழைக்கப்படுவதும் உண்டு. "அதை மட்டும் முடிச்சுக் கொடுத்துட்டு போங்க" என்று பாஸ் சொல்லும்போது காதுகளில் புகை வரும் நம்மவர்களுக்கு.




வார விடுமுறை நாட்களிலும் கூட வேலை பார்க்கும் நிலை ஒரு சிலருக்கு ஏற்படுவதும் உண்டு.  இது தவிர்க்க முடியாத நிலையாக  மாறிவிட்டது. இது போன்ற பிரச்சனைகள் குடும்பத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. எப்பப் பார்த்தாலும் வேலை வேலை வேலைதானா.. அப்பறம் எதுக்கு என்னைய கட்டுனீங்க.. என்று மனைவியர் அலுத்துக் கொள்ளும் குடும்பங்களை நிறையவே பார்க்கலாம்.


தற்பொழுது ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அது என்னன்னு தெரியுமா?  வேலை நேரம் முடிந்தவுடன் முதலாளியின் போனை அட்டென்ட் பண்ண தேவையில்லை. அதுமட்டும் இல்லாமல் மெசேஜ் வந்தாலும் அதற்கும் பதிலளிக்கவும் தேவையில்லையாம். மேலும் இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனை எழுந்தால் கூடஆஸ்திரேலியாவின் வேலை ஆணையத்திடம் முறையிட்டு, இறுதி முடிவு எடுக்கலாம் என பசுமை கட்சி முன்மொழிந்துள்ளது.


இதை அறிந்த தொழிலாளர்கள் படு குஷியாகி விட்டார்களாம். பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் இந்த சட்டம் உள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. இந்த சட்டம் இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில், பணியின் போது பயன்படுத்தும் மொபைல்  போனை பணி முடிந்தவுடன் சுவிட் ஆப் செய்து  கொள்ளும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில்  இருப்பதும் நாம் அறிந்ததே.


அப்பறம்.. எப்ப நம்ம நாட்டுக்கு இந்த சட்டம் வரும்னு நம்மாட்களுடைய மைன்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேக்குது.. வரும் வரும்.. கவலைப்படாம பொறுமையா இருங்க!

சமீபத்திய செய்திகள்

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

அதிகம் பார்க்கும் செய்திகள்