கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கொடியத்தூர் பிடிஎம் மேல் நிலைப்பள்ளி டபுள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. காரணம் சூப்பர் ஸ்வீட்டானது. இந்தப் பள்ளியில் படித்து வரும் 13 ஜோடி இரட்டையர்களும், பத்தாவது வகுப்பு தேர்வில் சூப்பராக பாஸ் செய்துள்ளனர்.
இந்த 13 ஜோடியுமே சாதாரணமாக பாஸ் செய்யவில்லை. நல்ல மார்க் எடுத்து பாஸாகி அசத்தியுள்ளனர். இந்த 26 பேரும் பிறந்தது முதல் ஒன்றாக படித்து வரும் நல்ல நட்புக்களும் கூட என்பதுதான் இங்கு விசேஷமானது.
இப்போது சேர்ந்து படிக்கிறோம். எதிர்காலத்தில் சேர்ந்தே வேலை பார்க்க வேண்டும் என்பதே எங்களது பேராசை. கடைசி வரை பிரியாமல் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம் என்று இந்த இரட்டையர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
கோழிக்கோடு மாவட்டத்திலேயே பிடிஎம் பள்ளியிலிருந்துதான் அதிக அளவிலான இரட்டையர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், இவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். இணைந்தே படிப்பார்கள். யாருக்காவது ஏதாவது சந்தேகம் வந்தால் மற்றவர்கள் வந்து உதவுவார்கள். இவர்களைப் போல ஒற்றுமையானவர்களை பார்க்கவே முடியாது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் சேர்ந்துதான் படிக்கிறார்கள். இப்போது சேர்ந்து வெற்றிகளைச் சுவைக்க ஆரம்பித்துள்ளனர் என்றார்.
கேரளாவில் பல பள்ளிகளில் அதிக அளவிலான இரட்டையர்கள் படித்து வருவது சகஜமான விஷயமாகும். அந்த வகையில் கோழிக்கோடு பிடிஎம் பள்ளி இரட்டையர்கள் அசத்தலான வெற்றியைப் பெற்று அனைவருக்கும் மிகச் சிறந்த ரோல் மாடல்களாக மாறியுள்ளனர்.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}