சென்னை: தமிழுக்கான உயரிய படைப்பான உலகம் போற்றும் பொதுமறையான திருக்குறளின் முப்பால்களையும் மையப்படுத்தி உருவாகியுள்ள திருக்குறள் படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் நீதியை நிலைநாட்டும் விதமாக மன்னர் ஆட்சி காலத்தை பிரதிபலித்த வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், ராஜராஜ சோழன், பூம்புகார், உள்ளிட்ட படங்கள் இன்றளவும் தமிழர்களின் வாழ்வியலை திரும்பி பார்க்கும் ஒரு அங்கமாக திகழ்கிறது. அதேபோல் காமராஜர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், மகாத்மா காந்தி, போன்ற அறிஞர்களின் வாழ்க்கை பாதையை மையப்படுத்தி உருவான படங்களும் இன்றளவும் போற்றப்படுகிறது.

இது தவிர மாபெரும் கவிஞர்களுள் ஒருவரான மகாகவி பாரதியாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான பாரதி திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
அந்த வரிசையில் தற்போது உலகம் போற்றும் பொதுமறையான திருக்குறள் நூலில் உள்ள அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால், என முப்பாலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் திருக்குறள்.
இப்படத்தை ரமணா கம்யூனிஸ்ட் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு காமராஜ் என்ற திரைப்படத்தையும் தயாரித்திருக்கின்றது என்பது நினைவிருக்கலாம். அதேபோல் காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ பாலகிருஷ்ணன் தான் திருவள்ளுவர் படத்தையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலோடு வீரமும் தமிழரின் வாழ்வியலை பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தை பறைசாற்றும் போர்க்காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அத்தோடு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியல்லும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. மிகப்பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் வள்ளுவர் கதாபாத்திரத்தில் கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ பிரின்ஸ் ஏ கே சுந்தர், நக்கீரராக இயக்குனர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச் சாத்தனாக கொட்டாச்சி ஆகியோருடன் குணா பாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
இப்படத்தை இசைஞானி இளையராஜாவுக்குப் போட்டு காட்டி இசையமக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். படத்தைப் பார்த்த உடனே இசையமைக்க ஒப்புதல் தெரிவித்து இப்படத்திற்காக சங்க இலக்கிய சொற்களோடு கவித்துவமும் பொருட்செறிவு மிக்க என்ற இரு பாடல்களையும் எழுதியுள்ளார் இளையராஜா. தமிழுக்கான வரலாற்றில் ஒரு அற்புத நிகழ்வாக உள்ள திருக்குறள் நூலை மையப்படுத்தி உருவாகியுள்ள திருக்குறள் படம் நிச்சயம் உலக அளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
யார் காரணம்.....?
நீங்கள் நீங்களாக இருங்கள்.. Don't try to be better than anyone!
மீண்டும்.. பள்ளிக்கூடம் போகலாமா.. A Journey Back to the Classroom!
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
அமைதியே மேலோங்கும்.. Peace Reigns Supreme!
கணிதத்தின் தலைமகன்!
தேசிய கணித தினமாச்சே இன்னிக்கு.. உங்களுக்கு ஓர் புதிர்.. விடையைச் சொல்லுங்க பார்ப்போம்!
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
{{comments.comment}}