- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 11 :
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
பொருள் :
கன்றுக்குட்டிகளுடன் இருக்கும் கறவை பசுக்கள் சுரக்கின்ற பாலினை கறக்கும் தொழில் செய்பவர்கள் ஆயர்குலத்தினர். அது மட்டுமல்ல தேடி வரும் பகைவர்கள் எவ்வளவு பலசாலிகளாக இருந்தாலும் அவர்களை போரிட்டு வெற்றிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். அப்படிப்பட்ட குற்றமில்லாத பசுக்களை வைத்திருக்கும் குலத்தில் தோன்றிய கொடி போன்ற உடலை உடைய பெண்ணே!புற்றில் இருக்கும் பாம்பு படம் எடுத்தது போல் பறந்த நெற்றியையும், மயில் தோகை விரித்தது போன்ற நீண்ட கூந்தலையும் உடையவளே. நீ இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரி தானா? சுற்றி உள்ள வீடுகளில் இருக்கும் அனைத்து தோழிகளும் வந்து உன்னுடைய வீட்டின் முன் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய வீட்டின் வாசலுக்கு வந்து, மழையை பொழிந்திடும் கருமையான மேகங்களை போல் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்திடும் கண்ணனின் திருநாமங்களை பாடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் மிகுந்த செல்வ செழிப்புடன் செல்லமாக வளர்க்கப்படும் செல்வந்தரின் பெண்ணாகிய நீ இப்படி பேசாமல் இருக்கலாமா? எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்து நீயும் கண்ணனின் பெருமைகளை போற்றி பாடிடு பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!
அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?
கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி
தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?
என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?
முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!
{{comments.comment}}