- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 15 :
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனகென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் என்பாவாய்.

பொருள் :
சின்னஞ்சிறு கிளி போன்ற அழகிய பெண்ணே! இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்! சில்லென்ற இந்த காலை நேரத்தில் உனக்காக வந்து நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என கோபத்துடன் அழைக்கும் தோழிகளுக்கு, வீட்டிற்குள் இருக்கும் பெண், கோபப்படாதீர்கள் இதோ வந்து விட்டேன். எனக்கு பேசத் தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாக இருந்து கொள்ளுங்கள் என கோபமாக பதிலளிக்கிறாள். அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழிகள், நாங்கள் அனைவரும் முன்பே வந்து காத்துருக் கொண்டிருக்கிறோம். அப்படி என்ன எங்களிடம் இல்லாத சிறப்பு உன்னிடம் உள்ளது? என கேட்கிறார்கள்.
அதற்கு வீட்டிற்குள் இருக்கும் பெண்ணும், என்னவோ நான் மட்டும் தான் தாமதமாக எழுவது போல் பேசுகிறீர்கள். மற்ற அனைவரும் வந்து விட்டார்களா? என கேட்ட, வெளியில் இருக்கும் பெண்கள், இப்படியே கேள்விகளாக கேட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருப்பாயா? வெளியில் வந்து நீயே அனைவரையும் எண்ணிப் பார்த்துக் கொள். வலிமை மிக்க குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடி அழிக்கும் திறமையும் மிக்க மாய கண்ணனை வணங்கி, போற்றி பாடி புண்ணியங்கள் பலவற்றை பெறுவதற்காக சீக்கிரம் எங்களுடன் கலந்து கொள்ள வெளியே வா என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு
திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்
PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ
'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி
{{comments.comment}}