- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 18:
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
வலிமையான, போர் திறன்மிக்க யானைகளை வைத்திருப்பவனும், போரில் பின் வாங்காத தோள் வலிமையும் உடையவனுமான நந்தகோபனின் மருமகளாகிய நப்பின்னை பிராட்டியே! நீ வாசனை மிகுந்த கூந்தலை உடையவள். வந்து உன்னுடைய வீட்டின் கதவை திறந்திடு. கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்திலும் இருந்து கேட்கிறது. கொடிகள் படர்ந்திருக்கும் மரங்களின் மீது குயில்கள் பாட துவங்கி விட்டன. பூக்களை போன்ற மென்மையான விரல்களை உடையவளே உன்னுடைய மைத்தனரான கண்ணனின் புகழை பாடுவதற்காக நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம். உன்னுடைய பூ போன்ற கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலி எழுந்து வந்து, எங்களின் உள்ளம் மகிழ்ச்சி அடையும் படி கதவை திறந்து அருள் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
யார் காரணம்.....?
நீங்கள் நீங்களாக இருங்கள்.. Don't try to be better than anyone!
மீண்டும்.. பள்ளிக்கூடம் போகலாமா.. A Journey Back to the Classroom!
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
அமைதியே மேலோங்கும்.. Peace Reigns Supreme!
கணிதத்தின் தலைமகன்!
தேசிய கணித தினமாச்சே இன்னிக்கு.. உங்களுக்கு ஓர் புதிர்.. விடையைச் சொல்லுங்க பார்ப்போம்!
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
{{comments.comment}}