திருப்பாவை பாசுரம் 9 :
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளே?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள் :
அழகிய நவரத்தினங்கள் மின்ன, மணிகள் கட்டப்பட்டுள்ள மாடங்களில் விளக்கேறிய கட்டப்பட்டுள்ள மாளிகை வீட்டில், இனிமையான நறுமணங்கள் வீசும் பஞ்சு படுக்கையின் சுகமாக படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமனின் மகளே எழுந்து வந்து உங்கள் வீட்டின் கதவினை திற. மாமனின் துணைவியாகிய மாமியே உன்னுடைய மகளை எழுப்புங்கள். நாங்கள் இவ்வளவு கூப்பிட்டும் எழுந்திருக்காமல், பதிலும் சொல்லாமல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் உன்னுடைய மகளுக்கு காதுகள் கேட்காதா இல்லை அவளுக்கு பேச தான் முடியாதா? சோம்பல் அவளை அந்த அளவிற்கு ஆட்கொண்டு விட்டதா? மந்திரத்திற்கு கட்டுப்பட்டு விட்டவள் போல் ஏன் இப்படி ஒரு தூக்கம் தூங்குகிறாள்? பலவிதமான மாயங்கள் செய்திடும் மாதவன், வைகுண்டத்தின் தலைவனான விளங்கும் நாராயணனின் நாமங்கள் பலவற்றையும் போற்றி பாடி, எங்களுடன் சேர்ந்து நீயும் நலன்கள் பலவற்றையும் பெறுவதற்காக எழுந்து வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}