திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

Jun 23, 2026,05:17 PM IST
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக, அரசு சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழு, தனது இடைக்கால அறிக்கையை முதல்வர் விஜிய்யிடம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ளது.

சமீபத்தில் திருவள்ளூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் அமோனியா கசிவு, பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தை அடுத்து, விபத்துக்கான காரணங்களை கண்டறியவும், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

விசாரணைக் குழுவின் விபரம் :





இந்த விவகாரத்தை தீவிரமாக ஆராய அரசு சார்பில் 3 அதிகாரிகள் அடங்கிய சிறப்பு வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் முக்கியத் துறைகளைச் சேர்ந்த பின்வரும் உயர்மட்ட அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்:
1. தொழிலக பாதுகாப்புத் துறை இயக்குநர்
2. சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர்
3. மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர்

தொழில்சாலைகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஆகிய மூன்று முக்கியக் காரணிகளையும் துல்லியமாக ஆய்வு செய்யும் நோக்கில் இந்தத் துறைகளின் தலைவர்கள் இக்குழுவில் இணைக்கப்பட்டனர்.

தீவிர ஆய்வுக்குப் பின் அறிக்கை தாக்கல் :
அரசு உத்தரவைத் தொடர்ந்து, இந்த 3 பேர் கொண்ட குழுவினர் அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலைப் பகுதிக்கு நேரில் சென்று அதிநவீன உபகரணங்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். வாயு கசிவு ஏற்பட்டதற்கான தொழில்நுட்பக் கோளாறுகள், சம்பவ இடத்திலிருந்த பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விரிவான தரவுகள் சேகரிக்கப்பட்டன. அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முதற்கட்டமாக நிறைவடைந்த நிலையில், குழுவின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தயாரித்த தங்களின் விரிவான இடைக்கால அறிக்கையை முதல்வர் விஜிய்யிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
இந்த இடைக்கால அறிக்கையில் விபத்து நடந்த விதம், உடனடி பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கான தற்காலிகப் பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் அடிப்படையில், தவறிழைத்தவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அரசு விரைவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்