சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி 9 முக்கியப் பிரமுகர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
திருவள்ளுவர் தினம் ஆண்டு தோறும் ஜனவரி 15ம் தேதி தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று திருவள்ளுவர் ஆண்டு 2056 பிறக்கிறது. திருவள்ளுவர் ஆண்டை எப்படி கணக்கிட வேண்டும் என்றால், ஆங்கில வருடத்துடன் 31 வருடங்களைக் கூட்டிக் கொண்டால் வருவதுதான் திருவள்ளுவர் ஆண்டாகும். கடந்த 1971ம் ஆண்டு முதல் இது அமலில் இருந்து வருகிறது.
ஒவ்வொரு திருவள்ளுவர் தினத்தன்றும் தமிழ்நாடு அரசு 9 துறைகளில் விருதுகளை வழங்கிக் கெளரவித்து வருகிறது. அதன்படி 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ஆம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பேரறிஞர் அண்ணா விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய 9 விருதுகளுக்குரிய பிரமுகர்கள் அறிவிக்கப்பட்டனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த 9 பேருக்கும் விருதுகளை வழங்கினார். அதன்படி, 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெரும் புலவர் மு.படிக்கராமு்கு வழங்கப்பட்டது.
2024ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலன், பாவேந்தர் பாரதிதாசன் விருது பேரொளி பொன். செல்வகணபதி, தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது - டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - வே.மு. பொதியவெற்பன், தந்தை பெரியார் விருது - விடுதலை ராஜேந்திரன், பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசன், அண்ணல் அம்பேத்கர் விருது விசிக எம்பி ரவிக்குமார், முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்துவவாசி ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை
My House
"சார் எங்க அப்பாவைக் காணோம் சார்.. ஏய் ரயிலே நில்லு போகாதே..!!
ரசிப்பேனென சொன்னால்!
"ஓணம் வந்தல்லோ... ஓணம் வந்தல்லோ"
Legacy of Captain Vijayakanth: விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்?
2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!
" கனிமவள கொள்ளைக்கு Fine போடுவார், கைது செய்வார்!" – ஆதவ் அர்ஜூனா அதிரடி பேச்சு
NLC இனி நமக்கு தேவையில்லை: சட்டசபையில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு!
{{comments.comment}}