திருவண்ணாமலை மலை  தீபத் திருவிழா முடிந்தது.. கொப்பரை கீழே வந்தது.. 27ம் தேதி "பிரசாத மை"!

Dec 07, 2023,11:26 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலை தீபத்திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. வருகிற 27ம் தேதி ஆருத்ர தரிசனத்தில் போது பிரசாத மை பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருவிழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். 

கடந்த மாதம் 26ம் தேதி கோயிலுக்குள் பரணி தீபம் எற்பட்டது. அதன் பின்னர் கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள மலைக்கோயில் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் 11 நாட்களுக்கு  மாலை 6 மணிக்கு ஏற்றப்படும். இந்த தீப தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு  தரிசனம் செய்வர். அத்தகைய சிறப்புடைய மகா தீபக் காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து இன்று காலை மகாதீபம் ஏற்றப்பட்ட தீபக் கொப்பரை மலை உச்சியிலிருந்து அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 



கோயிலில்,  தீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக  வைக்கப்பட்டுள்ளது. இந்த கொப்பரையில் இருந்து கிடைக்கும் மகா தீபம் மை மிகவும் சிறப்புடையதாகும். வருகிற 27ம் தேதி ஆருத்ர தரிசனம் நடைபெறும் அன்று நடராஜருக்கு தீப மை அணிவிக்கப்படும். அதன் பின்னர் அந்த மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்