- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 16 திருவெம்பாவை பாசுரம் 16 - முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
திருவெம்பாவை 16 :
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

பொருள் :
கடல் நீர் முழுவதையும் முன்பே குடித்து விட்டு, மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதி தேவியைப் போல் கருத்து இருக்கின்றன. அவளின் சிற்றிடை போல் மின்னல்கள் தெறித்து ஓடுகின்றன. அவளின் திருவடியில் இருக்கும் சிலம்புகள் சினுங்குவதை போல் ஒலி எழுப்பு இடி முழங்குகிறது. அவளது நெளிந்த புருவங்களைப் போல் வானவில் காட்சி தருகிறது. வள்ளலை போல் அடியார்களுக்கு வேண்டிய அனைத்தையம் தரும் சிவ பெருமானை பிரியாமல் எப்போது அவரது உடலில் ஒரு பாதியாக சேர்ந்தே இருக்கும் தேவியான அவள், தன்னுடைய கணவரை கணங்கும் பக்தர்களுக்கு கருணை சுரக்க ஓடி வந்து முன்னின்று காப்பவள். மழையை பொலியும் மேகங்களை போல் கருணை மழை பொழிபவள். அவளின் கருணையை போல் மழையே நீயும் விடாமல் பொழிய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
மனிதன் எப்போது மாமனிதன் ஆகிறான்?
PUNCTUATE YOUR PUNCTUALITY!
Social media & it's impact
தப்பாக நினைப்பார்கள்!!!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
Short Story: "மே...மே"
பேசும் தெய்வம்
{{comments.comment}}