மார்கழி 20 திருவெம்பாவை பாசுரம் 20 - போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

Jan 03, 2025,04:42 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 20 திருவெம்பாவை பாசுரம் 20 - போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் 


திருவெம்பாவை பாசுரம் 20 :


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் 

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்




பொருள் :


அனைத்திற்கும் முதலுமாக திகழ்பவனே உன்னுடைய மலர் போன்ற பாதங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவாகவும் இருக்கும் உன்னுடைய சிவந்த மொட்டுக்கள் போன்ற பாதங்களை வணங்குகிறோம். அனைத்து உயிர்களும் உருவாக காரணமாக இருக்கும் தங்கத்தை போன்றும் மின்னும் பாதங்களை சரணடைகிறோம். அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் வழங்கி அருளும் உன்னுடைய திருவடியை வணங்குறோம். உயிர்களுக்கு இறுதி காலத்தை தருகின்ற இணையற்ற பாதங்களை வணங்குகிறோம். திருமாலும், பிரம்மாவும் காண முடியாத தாமரை போன்ற பாத தரிசனத்தை எங்களுக்கு காட்டி அருளிய புகழை போற்றி பாடி வணங்குகிறோம். இதே போன்று எப்போதும் உன்னுடைய நினைவில் மூழ்கி மார்கழி நீராடி, உன்னை போற்றி பாடிட எங்களுக்கு அருளிட வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைத்தது இங்கிலாந்தில்

news

எடப்பாடி பழனிச்சாமி டில்லி செல்வதற்கு இதற்கு தானா?

news

இறுதிக்கட்டத்தை எட்டிய வடகிழக்கு பருவமழை... ஜனவரி 9 மற்றும் 10ம் தேதியுடன் முடிய வாய்ப்பு!

news

தமிழகத்தில் குளிர்காலத்தில் இயல்பை விட 81% அதிக மழை பதிவு

news

புதிய வேகம் எடுத்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு...ஜனவரி 17-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

news

அதிமுக கூட்டணியில் பாமக.,வுக்கு எத்தனை சீட் தெரியுமா?

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்...ரிக்டரில் 6.7 ஆக பதிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்