சென்னை: பக்கத்து வீட்டு பெண்ணை அவதூறாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார் எழுந்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த நாயகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். இவர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டவர். திருமணத்திற்குப் பிறகும் இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
சிறிய ரோலாக இருந்தாலும் இவருடைய நடிப்பின் திறமையால் பிரபலமாக பேசப்படுபவர். ராம் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்மா கேரக்டர்களில் அசத்திக் கொண்டிருக்கும் சரண்யா பொன்வண்ணன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டுப்பெண் ஸ்ரீதேவி. இவர் தனது வீட்டின் முன் பக்கத்தில் உள்ள 20 அடி கேட்டை திறக்கும் போது சரண்யா பொன்வண்ணனின் காரின் அருகே மோதுவது போல சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. சரண்யா கோபமடைந்து தெருவுக்கே வந்து விட்டார். ஸ்ரீதேவியின் வீட்டிற்கு முன்பு வந்து ஆவேசமாக சண்டை போட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தன்னை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி கொடுத்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}