ஜக்கம்மா சொல்றா ( ஒரு அமானுஷ்ய குட்டி கதை)

Nov 06, 2025,04:25 PM IST

- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி


அம்மா:  பூஜை அறையில் நின்று கொண்டு,   “ஜக்கம்மா சொல்றா , ரவி… இந்த வருஷம் கணக்கு  பரிட்சை ரொம்ப கஷ்டமா இருக்குமாம். நீ நல்லா  முயன்று படிக்கனும்”


ரவி: (யோசனையுடன்) “சரிம்மா. ஆனா பரிட்சைய பத்தி ஜக்கம்மா ஏன் சொல்றா”


அப்பா : (அவசரமாக) ஏதோ அவளுக்கு தெரிந்திருக்கும். பெரியவங்க சொன்னா கேட்கணும்.”


(சில நாட்கள் கழித்து, இரவில் கண் விழித்து படித்துக்கொண்டிருந்த  ரவி,   பாத்ரூமுக்கு செல்கிறான். திடீரென, அம்மா அப்பாவின் அறையில் இருந்து மெல்லிய குரல் கேட்கிறது .)




அம்மா : (குரலை மாற்றி)  “ஜக்கம்மா சொல்றா ,இந்த முறை ரவிக்கு கணக்குல நூற்றுக்கு நூறு வரும். பயப்படாதீங்க. “


(ரவிக்கு தூக்கி  வாரிப்போட்டது. அப்பா சிரிக்கிறார் )


அப்பா : (சிரித்தபடியே)  “இனிமே  ரவிக்கு பரீட்சை சமயத்துல உன்னை ஜக்கமான்னு தான் கூப்பிடனும்.  ஜக்கம்மான்னு சொல்லி, பையன நம்ப வச்சு, நல்ல படிக்க வச்சுட்ட.  பேஷ் பேஷ்.”


(ரவி தலையில் கை வைத்து ,இந்த ஜக்கம்மா  சாமி  இல்லை .அது தன் அம்மா என்பதை புரிந்து கொண்டான்.)


இருந்தாலும் அம்மாவின் தந்திரத்தை நினைத்து வியந்து போனான். ஜக்கம்மா சொன்னாள்  என்று கூறியதால் நானும் கஷ்டப்பட்டு படித்தேன் என்பது  உண்மைதான். அம்மா சொன்னால் கேட்க மாட்டேன் என ஜக்கம்மா மீது பழி போட்டுள்ளார் .


பரீட்சை முடிந்து , ஓடி வந்த ரவி, அம்மாவை கட்டிப்பிடித்து , “ஜக்கம்மா நான் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கி விடுவேன்” என கூறினான்.


அம்மா என்ற ஜக்கம்மா திகைத்து நின்றாள்.


ஒரு பிச்சைக்காரியின் அக்கறை (  உண்மையான குட்டி கதை)




நான் சென்னையில் இருந்து, ஒரு திருமணத்திற்காக காரைக்குடி சென்றேன். அப்போது  காரைக்குடி பேருந்து நிலையத்தில் டீ குடிக்க பத்து நிமிடம் காத்திருந்தேன். அங்கு சில பிச்சை எடுக்கும் தாய்மார்களை பார்த்தேன் .  ஒரு பிச்சைக்காரி  , கை நீட்டியதால்  நானும் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தேன்.  


அவள் சோர்ந்து  இருந்ததால்,  டீ சாப்பிடுகிறாயா என்று கேட்டேன். தலையாட்டியதும்,   ஒரு டீ வாங்கி கொடுத்தேன்.  டீ குடித்துக் கொண்டிருந்த அவள்   கையில்,  இரண்டு பொட்டலங்கள் ,தொங்கிக் கொண்டிருந்தன. அப்போது இன்னொரு பிச்சைக்காரி,  இவள் பக்கத்தில் வந்து ,அந்த இரு பொட்டலங்களையும்  பறிக்க ,இவள் மறுத்தாள். 


“இந்த பாரு இது நேத்து ராத்திரி உனக்கு கொடுத்தது .இது எல்லாம்   கெட்டுப் போயிருக்கும். இதை நீ சாப்பிடாத. குப்பையில் போடு”என்றாள்.


“எனக்கு பசிச்சா என்ன பண்றது.”


“பசிச்சா பட்டினி கிட . ஒரு நேரம் பட்டினி கிடந்தால் நல்லது தான். அதுக்காக பழையதை சாப்பிடாதே. உடம்புக்கு முடியாமல் கிடந்தினா  உன்னை யார் பார்க்கிறது. உடம்பு நல்லா இருந்தாதான் பிச்சையாவது எடுத்து சாப்பிட முடியும்” என அதை  வலுக்கட்டாயமாக பறித்து  குப்பையில் போட்டாள். அச் செயலை அனைவரும் வியந்து பார்த்தனர்.


அங்கு பேருந்திற்கு  காத்திருந்த ஒரு  பெண்  , நேற்று மிஞ்சிப் போன  பொரியலை தான்  சுடவத்து, இன்று  நான்  ஆபீஸ்க்கு கொண்டு வந்தேன் என, தன் சக தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். 


சொப்பன சுந்தரி  (மாயாஜால குட்டி கதை)




நிலவின்  ஒளியில் சொப்பன சுந்தரியை ,கோவிந்தன் முதல் முதலாக ஒரு நாள் சந்தித்தான். மதி மயங்கி போனான். அன்றிலிருந்து அவள் தினமும் அவனின் கனவில்  வாழும் தேவதையானாள்.


ஒருநாள் , நான் நிஜம் இல்லை என்று அவள் சொன்னபோது,  அவன் நம்பவில்லை. அவளை காதலித்து, எப்படியும்  நிஜ வாழ்க்கையில் மனைவியாக அடைந்தே தீரவேண்டும்  என  முடிவெடுத்தான். அவளுக்காக ஒரு மந்திரவாதியை  அழைத்து ஆலோசனை கேட்டேன்.


அந்த மந்திரவாதி ஒரு மாய கண்ணாடியை கொடுத்து ,  நீ கனவில் அவளை சந்திக்கும் போது, இந்த கண்ணாடியில் அவளது உருவத்தை பிடி என்றார் .கோவிந்தன் அவ்வாறே செய்தான். கண்ணாடிக்குள் சொப்பன சுந்தரியின் பிம்பம் சிக்கியது .


அடுத்த நாள் கண்ணாடியை திறந்து பார்த்தபோது,  அவளது பிம்பம் இல்லை . அதற்கு பதிலாக அவனது பிம்பம் தெரிந்தது . கோவிந்தன் குழம்பிப் போனான் .ஒரு குரல் சிரித்தது. சொப்பன சுந்தரி உன் கனவில் நீ உருவாக்கிய கற்பனை  தேவதை  என்றது அந்த குரல்.  அந்தக் குரல் அவனின் மனசாட்சி.


அப்போது திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது .  தொலைபேசியை எடுத்து பேசிய  கோவிந்தனுக்கு ,சொல்ல முடியாத அதிர்ச்சி. மகிழ்ச்சி.


மறுமுனையில் ஒரு பெண்.  என் பெயர் சுந்தரி .  “உன்னை  நான்  இன்று  நிஜ உலகில் சந்திக்கலாமா?‌” என்று கேட்டாள்.  கோவிந்தனின் உள்ளத்தில் பட்டாம்பூச்சி சிறகடித்தது.


அவளை சந்திக்கப் புறப்பட்டான் . அவனது  கனவு , அவனின்  ஆழமான, திடமான  அந்த நம்பிக்கை, உண்மையிலேயே நிஜமாகப் போகிறது.


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்