தீபங்கள் ஏற்றும்.. திருக்கார்த்திகை மாதத்தில்.. துளசி பூஜை வெகு விசேஷம்!

Nov 18, 2025,04:30 PM IST

- ரா. பிரேமா கண்ணன்


தூத்துக்குடி: துளசி பூஜை என்பது இந்து மரபில் மிகவும் புனிதமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விழாவாகும்.  துளசி செடி துளசி மாதா என்று கருதப்படுகிறது .


வீட்டில் வளம்,  ஆரோக்கியம்,  அமைதி,  செழிப்பு ஆகியவற்றை வழங்கும் புனித செடியாக போற்றப்படுகிறது .கார்த்திகை மாதத்தில் துளசி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. துளசி செடியை தூய்மையாக்கி மண்ணை அலங்கரித்து விலங்குகள் ஏற்றி பூஜை செய்யப்படுகிறது. 


வீட்டில் பெண்கள் துளசி செடிக்கு,  மஞ்சள்,  குங்குமம் , சந்தனம் மற்றும் மலர் மலர்களால் அலங்காரம் செய்கிறார்கள். குடும்ப நலன், ஆரோக்கியம், நல்லிணக்கம்  வேண்டப்படுகிறது.துளசி செடியை சுற்றி தீபம் ஏற்றுவது வீட்டில் உள்ள நெகட்டிவ் சக்திகளை நீக்கி நல்ல சக்திகளை வரவை வரவேற்கும் என்று நம்பப்படுகிறது. துளசி பூஜை விஷ்ணு பெருமானுக்கு மிகவும் பிரியமானதாக கருதப்படுகிறது . இது நேர்மறை ஆற்றலை கொண்டுவரும் .




ஸ்ரீ பிருந்தா சேவா டிரஸ்ட் ஸ்ரீ பிருந்தா கோசாலை மற்றும் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் பஜனை குழு சார்பாக,  துளசியின் மகத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும்  பொருட்டு 504 துளசி வழிபாடு  26.11.2025 புதன்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரி கலையரங்கத்தில் வைத்து மாலை 5:30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளதால் பக்தர்கள் அனைவரும் துளசி பூஜை விழாவில் கலந்து கொண்டு துளசி மாதாவின் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பைரவும் அபியும்!

news

சேலத்தில் களை கட்டும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் பெருவிழா

news

தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை

news

"நாம்" என்பதால் நான் செதுக்கப்பட்டபோதும்.. "நான்" ஆகவே நிலைத்திருந்தேன்.. I!

news

பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!

news

வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

மலரும் மனது!

news

வானத்து தாரகையின் கண்களிலிருந்து.. தாரை தாரையாய்.. The Crying Bride in the Sky

news

தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்