- அ. கோகிலா தேவி
ஓசூர்: தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் உள்ள ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கான டெண்டரை தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் ஒரு புதிய பசுமை விமான நிலையத்தை அமைக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளது. இதற்காக, TIDCO (தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்) ஒரு புதிய டெண்டரை (ஒப்பந்தப்புள்ளி) வெளியிட்டுள்ளது.
ஓசூர் ஒரு முக்கியமான தொழில் மற்றும் உற்பத்தி நகரமாக உள்ளது. தமிழ்நாட்டின் அதி முக்கியமான தொழில் கேந்திரமாக ஓசூர் விரிவடைந்து வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன. கிட்டத்தட்ட குட்டி பெங்களூருவாக பார்க்கப்படுகிறது ஓசூர். பெங்களூரு நகரிலிருந்து வெறும் 40 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளது.
இந்தியாவின் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள விமான நிலையங்களில் ஒன்றான பெங்களூருவின் கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையம் நகரின் வடக்கு திசையில் இருக்கிறது. ஓசூர் விமான நிலையம் செயல்படத் துவங்கினால், தென் இந்தியப் பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்தின் ஒரு பகுதியை இது கையாளும். இதனால் பெங்களூரு விமான நிலையத்தின் பணிச்சுமை குறையும்.
TIDCO-வின் டெண்டர் பணிகள் முடிந்து, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், ஓசூர் விமான நிலையம் தென் தமிழகத்திற்கான மற்றொரு முக்கிய நுழைவு வாயிலாக உயரும். இதன் மூலம் ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்ல இது பெரிதும் உதவும்.
அதேசமயம், மறுபக்கம் ஓசூர் விமான நிலையம் வந்து விடாமல் தடுக்க கர்நாடகத் தரப்பிலும் தீவிரமாக உள்ளதாக தெரிகிறது. காரணம், ஓசூர் விமான நிலையம் வந்தால் பெங்களூரு விமான நிலையத்தில் போக்குவரத்து வெகுவாக குறையும் என்ற அச்சம் அங்கு உள்ளது. ஏற்கனவே புதிய விமான நிலையம் கட்ட கர்நாடக அரசு தெற்கு பெங்களூரு பகுதியில் இடம் பார்த்து வருகிறது. ஆனால் ஓசூர் விமான நிலையம் வந்து விட்டால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடியும் என்ற குழப்பமும் அங்கு உள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு பல்வேறு தடைகளையும் தகர்த்து ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் தீவிரமாக உள்ளது.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}