டெல்லி: திருப்பதி லட்டில் நடந்த கலப்படம் தொடர்பாக புதிய விசாரணைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணையை சிபிஐ இயக்குநர் கண்காணிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டாதக மீடியாக்களிடம் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மிகப் பெரிய அரசியல் பிரச்சினையாக இது மாறியது.

ஆனால் முற்றிலும் இது பொய்யான குற்றச்சாட்டு என்று ஜெகன் மோகன் ரெட்டி விளக்கினார். குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆந்திர அரசு மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
லட்டில் நடந்த கலப்படம் தொடர்பாக முழுமையான ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்துள்ள ஆய்வு முடிவுகளிலும் கூட தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.. பின் ஏன் அவசரப்பட்டு மீடியாக்களுக்குப் போனீர்கள்.. கடவுள்களை அரசியலில் கலக்காதீர்கள். அவர்களை விட்டு வையுங்கள் என்று கடுமையாக கண்டித்தனர் நீதிபதிகள்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது புதிய விசாரணைக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, இந்தக் குழுவில் 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகள், 2 மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இடம் பெறுவர். சிபிஐ இயக்குநர் இந்த விசாரணையைக் கண்காணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. அரசியல் போர்க்களமாக இது மேலும் தொடர்வதை அனுமதிக்க முடியாது. என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}