கொல்கத்தா: தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூறி வரும் நிலையில் திடீரென 3 கட்சிகள் சேர்ந்து புதுக் கூட்டணியை உருவாக்கியுள்ளதால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சி, திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இக்கூட்டணியில் பிஜூ ஜனதாதளமும் இணையவுள்ளது. இதனால் தேசிய அளவில் ஒரே கூட்டணி உருவாகக் கூடிய வாய்ப்பு சிதற ஆரம்பித்துள்ளது.
கொல்கத்தாவில் இன்று திரினமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மமதா பானர்ஜியை, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் இந்தக் கூட்டணி முடிவு செய்யப்பட்டது. அடுத்த வாரம் பிஜூ ஜனதாதளம் தலைவர் நவீன் பட்நாயக்கை, மமதா பானர்ஜி புவனேஸ்வர் நகரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
பாஜக மற்றும் காங்கிரஸை சம தூரத்தில் வைத்து இருவரையும் வீழ்த்தும் திட்டத்துடன் தாங்கள் கை கோர்த்திருப்பதாக மமதாவும், அகிலேஷும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திரினமூல் தலைவர் சுதீப் பந்தோபத்யாயா கூறுகையில், எதிர்க்கட்சிகள் என்றாலே காங்கிரஸ் என்று பாஜக நினைக்கிறது. அப்படித்தான் மக்கள் மத்தியில் பதிய வைக்க பார்க்கிறது. இதன் மூலம் பிற எதிர்க்கட்சிகளை மதிக்காத நிலையை அது கடைப்பிடிக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை பாஜக மட்டுமல்லாமல் காங்கிரஸும் கூட எதிரிதான். இருவரையும் ஒடுக்கவே இந்தக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை மூன்றாவது அணி என்று நாங்கள் கூற மாட்டோம். இதுதான் பிரதான அணி. ஆனால் பிராந்திய கட்சிகள் எங்களுடன் கை கோர்த்தால் நிச்சயம் பாஜகவை வீழ்த்த முடியும் என்றார் சுதீப்.
ஆனால் மமதா பானர்ஜி அமைத்துள்ள இந்தக் கூட்டணியால் தேசிய அளவில் ஒருமித்த கூட்டணியை ஏற்படுத்த முயலும் எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். வாக்குகள் சிதறுவதால் நிச்சயம் இது பாஜகவுக்கு சாதகமானதாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே பாஜகவிடம் மமதா பானர்ஜி அடி பணிந்து போய் விட்டார் என்று ஒரு பேச்சு உலவுகிறது. இந்த நிலையில் பாஜகவுக்கு சாதகமான ஒரு கூட்டணியை மமதா பானர்ஜி உருவாக்கியிருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அதிர வைத்துள்ளது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}