கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பலத்த வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் தெளிவான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பான புகைப்படங்களை மம்தா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் நெற்றியில் நடுவே பலத்த வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் படுத்திருக்கிறார் மமதா பானர்ஜி. நெற்றியிலிருந்து மூக்கு வழியாக வாய் வரைக்கும் ரத்தம் ஒழுற்கியுள்ளது.
மம்தா பானர்ஜி தனது வீட்டில் காயமடைந்ததாக ஒரு தகவலும், விபத்தில் சிக்கியதாக இன்னொரு தகவலும் வந்துள்ளது. மம்தா பானர்ஜி முகத்தில் பெரும் வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு என்ன நடந்தது என்று அதிர்ச்சி எழுந்துள்ளது.
எங்களது தலைவர் காயமடைந்துள்ளார். அவர் விரைவில் நலம் பெற உங்கள் அனைவரது பிரார்த்தனையும் தேவை என்று திரினமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேற்கு வங்காளத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார் மம்தா பானர்ஜி. இந்த நிலையில் அவர் வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மமதா பானர்ஜி காயமடைந்திருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}