சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கிளைமேக்ஸை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், இதுவே தாமதம் என்ற ஆதங்கமும் திமுகவினர் மத்தியில் நிலவுகிறது.
திமுக எத்தனை தொகுதிகளில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் அதிகரித்துள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாள் மட்டுமே...
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி துவங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 29 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று வேட்புமனு தாக்கல் கிடையாது. வேட்புமனு தாக்கல் துவங்க இன்னும் நான்கு நாட்களே மீதம் உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை அறிவித்து, நாளை மாலை முதல் மயிலாப்பூருக்கு உட்பட்ட மந்தைவெளி தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்க போவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் எண்ணிக்கை பகிரப்பட்டு விட்டது. மீதமுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கும் விரைவில் தொகுதிப் பங்கீடு முடிவடையவுள்ளது. அதிமுக போட்டியிடும் தொகுதிகளும் விரைவில் அறிவிக்கப்படலாம், வேட்பாளர் பட்டியல் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் குழப்பம் :

ஆனால் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையே நிறைவடையவில்லை. பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கி முடிவு செய்து விட்டது திமுக. இதைத் தொடர்ந்து இன்று விசிக.,விற்கு பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்து விட்டது.
தற்போது தேமுதிக பாக்கி உள்ளது. மற்ற சிறு கட்சிகளுக்கான எண்ணிக்கையும் நிலுவையில் உள்ளது. தேமுதிகவுக்கு ஏற்கனவே தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதனால்தான் சிபிஎம், விசிக போன்ற கட்சிகள் அதிருப்தியில் இருந்து வந்தன. தற்போது அந்த பஞ்சாயத்து முடிந்திருப்பதால் அனேகமாக நாளைக்குள் தொகுதிப் பங்கீடு முடிவடையக் கூடும்.
இனி தொகுதிகளை ஒதுக்குவதில் குழப்பம் வருமா என்று தெரியவில்லை. அதேசமயம், அதில் பெரிய அளவில் பிரச்சினை எழ வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் கிளைமேக்ஸ் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுவே சற்று தாமதம் என்ற ஆதங்கமும் நிலவுகிறது.
மிகப் பெரிய கூட்டணியாக இது அமைந்துள்ளதால், திமுக எத்தனை தொகுதிகளில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}