சென்னை : திமுக கூட்டணியில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாகி உள்ளது.
திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதனால் இந்த முறை அதிக இடங்களை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என ஆரம்ப முதலே கேட்டு வந்தது. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பேரு ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையையும் விசிக முன் வைத்து வைத்தது.

தற்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் தர வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி வந்தார். ஆனால் தால்கள் கேட்டதை விட குறைவான தொகுதிகளையே திமுக தலைமை தர முன்வந்திருப்பதால், வேட்பாளர்கள் தேர்வில் தனக்கு நெருக்கடியும், அழுத்தமும் ஏற்றப்பட்டுள்ளதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன் பேஸ்புக் லைவ்வில் தனது கட்சி தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன் வேதனை தெரிவித்திருந்தார். இதனால் விசிக கேட்கும் தொகுதிகளை திமுக தரவில்லை என்றால் திருமாவளவன் என்ன முடிவு எடுப்பார் என்பது போன்ற கேள்விகள் எழுந்து வந்தது.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு திமுக தலைமை தரும் 8 தொகுதிகளை ஏற்க விசிக ஒப்புதல் தெரிவித்திருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை விட கூடுதலாக இரண்டு இடங்கள் விசிக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது. இது அக்கட்சி தொடர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விசிக போட்டியிட போகும் அந்த எட்டு தொகுதிகள் எவை என்பது குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
விசிக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 தொகுதிகளில் 6 தனித்தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகளும் அடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த பாமக பிளவுபட்டிருப்பதால் அது விசிக.,விற்கு வட மாவட்டங்களில் மிகப் பெரிய பலமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
எல் நினோ எதிரொலி: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சி அபாயம்
ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!
கண்ணீருடன் கட்டித்தழுவிய ராமதாஸ்...நல்லது நடக்கும் நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
புயலை கிளப்பிய மேயர் பிரியாவின் பேச்சு...சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
திரிஷா படத்தை வச்சே ஆகணும்...காரைக்குடி மாமன்ற கூட்டத்தில் சுவாரஸ்யம்
ருத்ர மந்திரத்தை மட்டுமே பற்றிக் கொண்டு .. சிவனை சென்றடைந்த.. ருத்ர பசுபதி நாயனார்
நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!
Poem: கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
{{comments.comment}}