சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த சனிக்கிழமை அன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நவீன வசதிகளுடன் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார்.
புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி , அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம், கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 32 கிலோமீட்டர் இருப்பதால் அதற்கு ஏற்ப கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கலாம் என்றும், அவர்களது கூடுதல் கட்டணம் திரும்பித் தரப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோயம்பேட்டிலிருந்து திருச்சிக்கு அரசு விரைவு பேருந்துகளில் ரூபாய் 460 வரை வசூலிக்கப்பட்ட நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துகளுக்கு கட்டணமாக 430 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 20 முதல் 35 ரூபாய் வரை மிச்சமாகிறது என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}