சென்னை: தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களுக்கான கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1997ம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இந்த மினி பஸ். சிற்றுந்து என்ற பெயரிலான இந்த மினி பஸ்களின் சேவை, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில் மிகப் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அரசுப் பேருந்துகள் போக முடியாத இடங்களுக்கெல்லாம் மினி பஸ்கள் சென்றதால் மக்களின் போக்குவரத்து இயல்பானது.

அதுவரை ஆட்டோக்களுக்குப் பெரிய தொகையை செலவிட வேண்டி வந்த மக்களுக்கு மினி பஸ்கள் மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமைந்தன. இந்த மினி பஸ்களைப் பின்பற்றித்தான் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஸ்மால் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த ஸ்மால் பஸ்கள் அரசால் இயக்கப்படுவபை. தற்போது சென்னையிலும் மினி பஸ்களை அறிமுகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களின் டிக்கெட் கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது. புதிய கட்டண விகிதம் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ. 4 கட்டணமாக இருக்கும். அடுத்த ஸ்டேஜ் வரை இதே கட்டணம்தான். அதாவது முதல் நான்கு கிலோமீட்டர் வரைக்கும் 4 ரூபாய்தான் டிக்கெட் கட்டணமாகும். அதற்கு அடுத்த ஸ்டேஜுக்கு ரூ. 5, 4வது ஸ்டேஜுக்கு ரூ. 6, 5வது ஸ்டேஜுக்கு ரூ. 7, 6வது ஸ்டேஜுக்கு ரூ. 8, 7வது ஸ்டேஜ் 8, மற்றும் 9வது ஸ்டேஜ் வரை ரூ. 9 கட்"ணமாக இருக்கும்.10வது ஸ்டேஜுக்கான கட்டணம் ரூ. 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
விஜய் பக்கம் திரும்புகிறதா காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் சலசலப்பா.. என்ன நடக்கிறது?
கமல் தயாரிக்கும் தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகல்...பரபரப்பு விளக்கம்
அடி என் தங்கமே. இதுக்குப்போய் யாராவது கவலைப்படுவாங்களா?.. புதுவசந்தம் (7)
{{comments.comment}}