அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!

Nov 28, 2025,01:49 PM IST
- அ.சீ.லாவண்யா

சென்னை:  அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாதந்தோறும் திரைப்படங்களை திரையிடும் திட்டத்தின் பகுதியாக 'காக்கா முட்டை' திரைப்படத்தைக் கட்டாயமாக ஒளிபரப்பு செய்ய பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நடவடிக்கை, மாணவர்களின் சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முக்கியமான கல்வி முயற்சியாகக் கருதப்படுகிறது.

இயக்குநர் மணிகண்டன் இயக்கி, நடிகர் தனுஷ் - இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த படம்தான் காக்கா முட்டை.  யோகிபாபு, திலக் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் இரு சிறார்கள்தான் நாயகர்கள். காக்கா முட்டை' திரைப்படம் நகர்ப்புற ஏழை குழந்தைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை, சமூக சமத்துவம், குழந்தை மனநிலை, மற்றும் கனவுகளை மையப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இதை மாணவர்கள் காண்பது, பாடப்புத்தக அறிவைத் தாண்டி சமூக உண்மைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது.



திரைப்படம் குழந்தைகளின் சிந்தனை திறனைத் தூண்டுவதோடு, வாழ்க்கைச் சிக்கல்களை பல கோணங்களில் காணும் திறனை வளர்க்கிறது. அந்த வகையில் காக்கா முட்டை படமானது குழந்தைகளின் ஏட்டு அறிவை தாண்டி சமூக வெளிப்புறத்தின் உள்ள அறிவையும் கற்று கொள்ள உதவுகிறது.

திரைப்படத்தில் காட்டப்படும் வறுமை, நகர்ப்புற சமத்துவமின்மை, மற்றும் குழந்தை ஆசைகள் போன்ற அம்சங்கள் மாணவர்களுக்கு ஒருவிதமான பொறுப்பை மேம்படுத்தும். மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் வீட்டின் நிலவும் பெற்றோரின் சிரமங்களும், குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செய்யும் தங்களுக்காக தான் உழைக்கின்றன என்பதை புரிந்து கொள்ள கூடிய படமாகும்.

ஒவ்வொரு மாதமும் திரையிடப்படும் படங்களின் பட்டியலில் 'காக்கா முட்டை' சேர்த்திருப்பது, கல்வித்துறையின் உள்ளடக்கத் தேர்வில் சமூக நோக்கு மேலோங்கி இருப்பதை காட்டுகிறது. பள்ளிகளில் மாணவர்களின் வளர்ச்சி மற்றும் அறிவு திறன் மேம்படுவதைத் தாண்டி பள்ளிகளில் இந்த அணுகுமுறை கல்வி முறையை நவீனமயமக்குகிறது.

குழந்தைகளின் பள்ளி படிப்பில் இது போன்ற நலத்திடங்களை அமல்பாடுத்தும் போது குழந்தைகளும் ஒரு மன மகிழ்ச்சியுடன் படிக்க இது உதவும் என்று நம்பப்படுகிறது. 

(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!

news

இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்

news

ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!

news

மியாமி ஜி 20 மாநாடு.. தென் ஆப்பிரிக்க அழைக்கப்படாது.. அமெரிக்கா முடிவு!

news

ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!

news

ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு

news

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

news

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!

news

அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!

அதிகம் பார்க்கும் செய்திகள்