சென்னை: குரூப் 2 காலிப் பணியிடங்கள் கூடுதலாக 213 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக குரூப் 1, குரூப் 2, 2 ஏ மற்றும் குரூப் 4 என பல்வேறு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த ஆண்டு குரூப் 2 மற்றும் 2 ஏ போட்டித் தேர்வுகள் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் குரூப் 2 வில் 507 காலிப்பணியிடங்கள், குரூப்-2ஏ வில் 1,820 காலிப்பணியிடங்கள என மொத்தம் 2,327 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது.இதில் தேர்வாளர்கள் சுமார் 5.81 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

இதற்கிடையே தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து குரூப் 4ல் கூடுதலாக 2,208 காலியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 8932 ஆக அதிகரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இதனை பரிசீலனை செய்த தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ எழுதிய மாணவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸை கொடுத்துள்ளது.
அதாவது, ஏற்கனவே குரூப் 2 மற்றும் 2 ஏ வில் 2327 ஆக இருந்த காலி பணியிடங்களுக்களில் தற்போது கூடுதலாக 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 2540 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீங்கள் நீங்களாக இருங்கள்.. Don't try to be better than anyone!
மீண்டும்.. பள்ளிக்கூடம் போகலாமா.. A Journey Back to the Classroom!
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
அமைதியே மேலோங்கும்.. Peace Reigns Supreme!
கணிதத்தின் தலைமகன்!
தேசிய கணித தினமாச்சே இன்னிக்கு.. உங்களுக்கு ஓர் புதிர்.. விடையைச் சொல்லுங்க பார்ப்போம்!
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டின் அழகு!
{{comments.comment}}