சென்னை: 3935 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் குரூப் 1,குரூப் 2, குரூப் 4, தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுத் துறையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் மூலம் அரசு வேலையில் பணிபுரிய வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இதற்காக பலரும் போட்டா போட்டி கொண்டு படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.அதே சமயத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமம் இல்லாமல் படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வு தேதி தேதியை அறிவித்து வருவதும் வழக்கம்.

அதன்படி இத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் டிஎன்பிசி நிர்வாகம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, 3,935 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வுகள் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.
மேலும் குரூப்-4 தேர்வுக்கு இன்று முதல் அடுத்த மாதம், அதாவது மே 24ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக குரூப் 4 தேர்வுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}