சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிசி தேர்வுக்கான அட்டவணைகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு வருடமும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்னதாகவே தேர்வு தேதிகள் குறித்த அட்டவணைகள் வெளியிடப்படுவது வழக்கம். இப்படி முன்கூட்டியே தேர்வு தேதிகள் மற்றும் அதன் விவரங்கள் வெளியிடப்படுவதால் மாணவர்கள் எளிதாக தங்களை தயார்படுத்தக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

அந்த வரிசையில் அடுத்த வருடம் அதாவது 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிசி தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி
குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும். இந்த தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதியும், குரூப் 2 மட்டும் குரூப் 2 ஏ தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்து விவரங்களை அறிந்து கொள்ள www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அத் தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் அறிக்கையில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}