சென்னை: டி என் பி எஸ் சி குரூப் 1 முதன்மைத் தேர்வு ரிசல்ட்டை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இண்டர்வியூ நடைபெறும் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
டி என் பி எஸ் சி நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் உள்ள காலி பணியிடங்களுக்கான குரூப் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டு தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முதலிய பணிகளுக்காக ஆண்டுதோறும் குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குரூப் 1 முதன்மை தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்கள் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்காக கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை எழுத்து தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் குரூப் 1 முதன்மைத் தேர்வு எழுதி இருந்தனர். இந்த குரூப்1 முதன்மை தேர்வுக்கான முடிவை இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இன்டர்வியூ நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}