சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசுத் துறையிலும் உள்ள காலிப் பணிகளிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த துறைகளுக்கான அரசு பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள்.
அதன்படி குரூப் 4 பிரிவில் இடம் பெறும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1,705, சுருக்கெழுத்தர் 445, தனிப்பட்ட உதவியாளர், கிளார்க் 3, தனிச் செயலாளர் 4, இளநிலை நிர்வாகி 41, பால் பதிவாளர்- 15, வரவேற்பாளர் 1, ஆய்வக உதவியாளர் 25, பில் கலெக்டர் 66, தொழிற்சாலை மூத்தஉதவியாளர் 49, வனக் காப்பாளர், பாதுகாவலர் 1,177 மற்றும் இளநிலை ஆய்வாளர் 1 என மொத்தம் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.
இதில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது. மேலும் குரூப் 4 இல் வனத்துறையில் 1,177 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது. குரூப் 4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மே 27 ஆம் தேதியே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வு மையத்திற்குள் நுழைவதற்குத் தேவையான முக்கியமான அட்மிட் கார்டு, விண்ணப்பதாரர்கள் தங்கள் அடையாளத்தை நிறுவுவதற்கான ஹால் டிக்கெட், மற்றும் அரசாங்க அடையாளச் சான்று ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே தேர்வு மையங்களுக்கு தேர்வாளர்கள் சென்று விட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}