சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9 தேதி நடைபெறும் எனவும், இந்தத் தேர்வுக்காக விண்ணப்பிக்க வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி தேதி எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை தரக்கூடிய வகையில் குரூப் 4 தேர்வுகள் இருப்பதாலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை போதுமானதாக இருப்பதாலும், பல லட்சம் பேர் தகுதி உடையவர்களாக இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை பலரும் எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கான அறிவிப்பை தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில்
வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், உட்பட 6,244 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி காலை 9:30 மணி முதல் நண்பகல் 12. 30 மணி வரை நடைபெறும். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி தேதி. குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை திருத்துவதற்கு மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை என மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள தாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
{{comments.comment}}