சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது.
கடந்த ஜூன் 25ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த தங்கத்தின் விலை கடந்த 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் பின்னர் சற்று குறையத் தொடங்கிய தங்கம், 2013ம் ஆண்டில் சர்வதேச அளவில் சுமார் 6 சதவீதம் வரை குறைந்தது. அதன் பின்னர் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டே காணப்பட்டு வருகிறது.
உலகத்தில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவு தென்னாப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறதாம். கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. தங்கம் எவ்வளவு பலமையாததாக இருந்தாலும் அதன் தரம் மாறாமல் இருப்பதால் தங்கம் அனைத்து தரப்பினர்களிடையே முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த தங்கத்தில் மூதலீடு என்பது நம்பிக்கை மிக்கதாக மக்கள் கருதி வருகின்றனர்.
இதனை மறுக்க முடியாது என்பதால் தங்கத்தில் பெரும்பான்மையான மக்கள் மூதலீடு செய்து வருகின்றனர். இதனால் தான் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. உலகிலேயே அதிகமாக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு என்றால் அது அமெரிக்கா தானாம். சரிங்க இதெல்லாம் இருக்கட்டும் இன்றைக்கு தங்கம் விலை என்ன என்று கேட்பது புரிகிறது. சரி வாங்க இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கத்தின் சென்னையின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,625 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 35 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.280 ஆக குறைந்துள்ளது.ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 ஆக குறைந்துள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,000 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,228 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,824 ஆக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.66,250 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,62,500க்கு விற்கப்படுகிறது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.72,280 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,22,800க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.94.50க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 756 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.945 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,450 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.94,500க்கு விற்கப்படுகிறது.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}