12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 03, 2025... மகிழ்ச்சி அதிகரிக்க போகும் ராசிகள்

Sep 03, 2025,10:39 AM IST


தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆவணி 18ம் தேதி புதன்கிழமை

ஏகாதசி. அதிகாலை 02.08 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இன்று இரவு 10.28 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீரிடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - உங்கள் பேச்சுத் திறமையால் பங்குதாரர்களைச் சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் நலம் தேறும். காணாமல் போன பணம் திரும்பக் கிடைக்கும். 


ரிஷபம் - ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான சந்திப்புகளைத் தவிர்க்கவும். சுபகாரியங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. இறைவனை வழிபடுவது மன அமைதியைத் தரும். 


மிதுனம் - உங்களுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை முடிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசி கிட்டும். 


கடகம் - தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் உங்கள் பங்கு கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்லிணக்கம் உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்வீர்கள். தந்தை வழி உறவுகளால் நன்மை கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல செய்தி வரும்.


சிம்மம் - உங்களைச் சுற்றி நட்பு வட்டம் விரிவடையும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். உங்களைப் பற்றி தவறான செய்திகள் பரவும். பொது இடங்களில் பேசும்போது கவனம் தேவை. பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். 


கன்னி - வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். முக்கியமான நபர்களுடன் பழக்கம் ஏற்படும். காதலர்களிடையே இருந்த சண்டை விலகும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்கும் யோகம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். 


துலாம் -   யாரிடமும் உங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் எங்கு சென்றாலும் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய கடினமாக உழைக்க வேண்டும்.


விருச்சிகம் - குடும்பத்துடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசி கிட்டும். வெளிநாட்டு நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். 


தனுசு -  தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரிகள் அதிக லாபம் பெற முயற்சி செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். யோகா மற்றும் நடன வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். 


மகரம் - புதிய கட்சியில் இருப்பவர்களுக்கு மதிப்பு கிடைக்கும். மகளுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷன் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வருமானம் உயரும். சகோதர, சகோதரிகள் உதவியாக இருப்பார்கள். 


கும்பம் -  புதிய தொழில் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். தம்பதிகள் சேர்ந்து முடிவெடுப்பார்கள். நினைத்த காரியம் வெற்றி பெறும். குழந்தைகள் கேட்ட எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 


மீனம் - பழுதான வாகனம் சரி செய்யப்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். மாணவர்களின் முயற்சிகள் வெற்றி பெறும். நிலுவையில் இருந்த சம்பளம் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

news

திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி

news

10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!

news

நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்

news

பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்

அதிகம் பார்க்கும் செய்திகள்