தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், கார்த்திகை 19 ம் தேதி புதன்கிழமை
இன்று பகல் 01.08 வரை திரிதியை, அதற்கு பிறகு சதுர்த்தி. மாலை 05.40 வரை பூராடம், பிறகு உத்திராடம். காலை 06.15 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம்.
நல்ல நேரம்: காலை - 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10..45 முதல் 11.45 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீரிஷம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பண விஷயங்களில் யாரையும் நம்பி பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு திடீர் பண இழப்பு ஏற்படலாம். முதலீடுகள் செய்ய நல்ல நேரம். எளிமையாகவும், நேர்மையாகவும் நடப்பத சிறப்பு. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம் - புதிய வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத பண வரவு ஏற்படும். குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத நிலை ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கும்.
மிதுனம் - வியாபாரத்தில் லாபம் ஏற்படும். அலுவலகத்தில் பணி சுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது சிறப்பு. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
கடகம் - நன்மைகள் அதிகம் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் நிகழும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம் - செல்வம் பெருக வாய்ப்புகள் ஏற்படும். தடைபட்ட வேலைகள் முடியும். வெளியூர் பயணம் ஏற்படலாம். அந்தஸ்து, மரியாதை அதிகரிக்கும். சிறு சிறு சவால்கள் இருந்தாலும் விடா முயற்சியுடன் வெற்றி அடைவீர்கள்.
கன்னி - தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நிலை குறித்த கவலை வந்து போகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனைவியின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதிருப்பது நன்மைகளை அதிகரிக்க செய்யும்.
துலாம் - வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். புதிய வேலைகளை துவங்க ஏற்ற நாளாக இருக்கும். துவங்கும் வேலைகள் தடையின்றி முடிவடையும்.
விருச்சிகம் - பொருள் சேர்க்கை ஏற்படும். சில பணிகளில் தடைகள் ஏற்படலாம். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்படலாம். கவனம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு - தொழில் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பு பலன் தரும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். கோபத்தை குறைத்து, புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி முடிவுகள் எடுப்பது சிறப்பு.
மகரம் - முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும். விரும்பிய பொருட்கள் கிடைக்கும். சமூகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது.
கும்பம் - பயணங்கள் இனிமையாகும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவுகளை குறைப்பது சிறப்பு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
மீனம் - நிதி நிலையை வலுவாக இருக்கும். நல்ல செய்திகள் தேடி வரும். தொழில் சார்ந்த முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். சில தடைகள் வந்து நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!
மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ
46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!
தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா
டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்
பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
{{comments.comment}}