12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Feb 04, 2025,10:10 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், தை 22 ம் தேதி செவ்வாய்கிழமை

ரதசப்தமி. காலை 07.54 வரை சஷ்டி, பிறகு சப்தமி. அதிகாலை 02.30 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை 

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  சுமாரான நாளாக இருக்கும். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இருந்தாலும் யாரையும் நம்பி எந்த பொறுப்புக்களையும் ஒப்படைக்காதீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புக்கள். வார்த்தையில் கவனம் வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது.


ரிஷபம் - சாதகமான நாளாக இருக்கும். எதையும் கவனமாக திட்டமிட்டு செய்வதால் நன்மைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலை சுமை அதிகரிக்கலாம். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணம் வரவு குறையலாம். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கண், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.


மிதுனம் -    அனுகூலமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாளாக இருக்கும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றி மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும்.


கடகம் -   சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். திடீர் பணவரவுகள் ஏற்படுவதால். பணம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 


சிம்மம் -   தடைகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். எதிலும் பொறுமையை கையாள்வது அவசியம். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்வது நல்லது. கையில் இருக்கும் பணம் கரையலாம். மூட்டு அல்லது கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.


கன்னி -  சுமாரான நாளாக இருக்கும். சில தடைகளை சந்திக்க வேண்டி இருக்கலாம். பணியிடத்தில் சவாலான சூழலை சந்திக்க நேரிடலாம். பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவு சுமாராக இருக்கும்.


துலாம் -   எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் பொறுமையை சோதிக்கும் சூழல் அமையலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை குறைப்பது நல்லது.


விருச்சிகம் -  சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு நல்ல நாள். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 


தனுசு - சாதகமான நாளாக இருக்கும். எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணையிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும்.


மகரம் -  சுமாரான நாளாக இருக்கும். நன்மை-தீமை இரண்டும் கலந்த நாளாக இருக்கும். பணிகளை திட்டமிட்டு செய்வதால் சிரமங்களட தவிர்க்கலாம். வாழ்க்கை துணையுடன் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கலாம். தலைவலி, பல் வலி போன்றவை ஏற்படலாம்.


கும்பம் -   சுமாரான நாளாக இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கலாம். வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ளலாம். வேலை சுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணப்புழக்கம் குறைய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


மீனம் -   எதிலும் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள். பணியிடத்தில் பதற்றமான சூழல் நிலவும். கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கையில் இருக்கும் பணத்தை திட்டமிட்டு செலவு செய்வது சிரமங்களை தவிர்க்க உதவும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

news

புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?

news

விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்

news

கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

news

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!

news

இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்

news

தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி... மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்