தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மே 06 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
விசுவாவசு வருடம், சித்திரை 23 ம் தேதி செவ்வாய்கிழமை
பகல் 01.18 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. இரவு 07.06 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.55 வரை மரணயோகமும் , பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : 01.30 முதல் 02.30 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - வியாபாரிகளுக்கு வெளிநாட்டு பயணம் லாபத்தை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இதுவரை வாரா கடன்கள் வந்து சேரும். அரசு அதிகாரிகளுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கும்.
ரிஷபம் - பங்குச் சந்தைகளில் பணம் போட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாபம் உண்டாகும். இடமாற்றம் உண்டு. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு முன்பணம் கிடைக்கும். உறவினர்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு தாங்கள் விரும்பியவாறு வரன் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆரோக்கியம் சிறக்கும்.
மிதுனம் - காதலர்கள் தங்கள் குடும்பத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம். தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். வியாபாரம் செழிக்கும். சகோதர சகோதரிகளே இடையே அன்பு பாராட்டுவீர்கள். உறவினர்கள் வந்து போவார்கள். ஒரு சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். மாணவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.
கடகம் - பெண்களுக்கு புதிய ஆடை ஆபரணம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக தாங்கள் சந்திக்க வேண்டும் என்பவரை சந்திப்பீர்கள். விரும்பிய துறையில் நீங்கள் கால் பதிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். தம்பதிகள் ஆலயப் பணியில் இணைந்து செயல்படுவீர். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம் - ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு பெரிய ஆடர்கள் கிடைக்கும். புரிந்து கொள்ளாமல் சென்ற தங்கள் துணைவியார் திரும்பி வந்து சேருவார். தாயின் உடல்நலத்தில் கவனம் கொள்ளவும். மருத்துவ செலவிற்கு இடம் உண்டு. உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வர்.
கன்னி - இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பண பற்றாக்குறை நீங்கும். குடும்பத் தலைவிகள் குடும்பத்திற்காக புதிய தொழில் துவங்குவர். பயணத்தின் போது கவனம் தேவை. உடல் நலத்தில் கவனம் தேவை.
துலாம் - மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்களை பெறுவர். திருமணமானவர்களுக்கு குழந்தைப் பேறுக்கான நற்செய்தி கிடைக்கும். பெண்களுக்கு பண வரவு அதிகரிக்கும். குறிப்பாக கணினி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிகம் - மறுமணத்திற்காக காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வெளிநாடு பயணம் உண்டாகும். வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்கு வெற்றியாகும். பிள்ளைகள் தங்களின் பெற்றோரை மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை சரிவர செய்து முடிப்பார்கள்.
தனுசு - வெளியூர் பயணம் லாபத்தை தரும். தேக ஆரோக்கியம் சிறக்கும். கூட்டுத் தொழிலாளிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தாங்கள் நினைத்த ஒரு காரியம் என்று இனிதாக முடியும். எதிர்பார்த்த நபரை இன்று சந்திப்பீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவர்.
மகரம் - உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
கும்பம் - அக்கம் பக்கம் வீட்டார் உதவி புரிவார்கள். நீண்ட காலமாக பார்க்காத இன்று நண்பரை இன்று சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஆலோசனை செய்து தங்கள் வேலைகளை பங்கிட்டு முடிப்பர். குடும்ப தலைவிகளுக்கு தங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.
மீனம் - பிரிந்த தம்பதிகள் இணைவர். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும். நிறைய அலைய வேண்டியிருக்கும். ரியல் எஸ்டேட் கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்களிடையே கருத்து வேறுபாடு வந்து போகும்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}