12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 08, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்

Oct 08, 2025,10:19 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 08 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 22 ம் தேதி புதன்கிழமை

இந்திய விமானப்படை தினம். காலை 07.40 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 03.41 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.01 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்




இன்றைய ராசிபலன் :


மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். யோகாவில் மனம் ஈடுபடும். அரசு காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து செல்வது நல்லது. சுப காரியங்கள் நடக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு, பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பெற்றோரின் கனவுகள் பலிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். ஆன்மீக சுற்றுலா சென்று வருவார்கள். பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, மனைவி தவறுகளை சுட்டிக்காட்டினால் கோபப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வெளியூர் நண்பர்கள் உதவுவார்கள். தொலைபேசி மூலம் மார்க்கெட்டிங் பிரிவினர் ஆர்டர்களைப் பெறுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். விசா கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். மாணவர்கள் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணம் உண்டாகும். மனம் விசாலமாகும். உதவும் குணம் மேலோங்கும். உடல் நலம் சிறப்படையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் ஆர்வம் ஏற்படும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவார்கள். தேகம் பளிச்சிடும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, அன்றைய தினம் சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அந்த பயணங்களால் பெரிய நன்மை இருக்காது. இதனால் நேரமும் பணமும் விரயமாகும். எனவே, இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு, உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். உடல் வலிமை உண்டாகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, திடீர் வாய்ப்புகள் மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு, கணவர் வீட்டார் தொல்லை நீங்கும். பெண்கள் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் நன்மையில் முடியும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வார்கள். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு சற்று அலைச்சல் கூடும். உடல் நலம் சிறக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, நண்பர்களின் வட்டாரம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவார்கள். பிள்ளைகளை தட்டிக் கொடுப்பது நல்லது. கோபித்துக் கொண்டு சென்ற துணைவியாரிடம் சமரசம் செய்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் கோப்பையை பெறுவார்கள். உடல் நலம் சிறப்படையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களுக்கு, வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை செய்வார்கள். நண்பர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். காதல் விஷயங்களில் கசப்பு ஏற்படலாம். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். வர வேண்டிய பணம் வசூலாகும். பிரிந்த உறவினர்கள் உங்களைத் தேடி வந்து மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, பிரிந்த தம்பதிகள் தங்கள் தவறை உணர்ந்து இணைவார்கள். வெளியூர் மற்றும் வெளியிடங்களுக்குச் சென்று வருவார்கள். இளைஞர்களுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். தேகத்தில் உற்சாகம் வெளிப்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கிரே.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்