12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 12, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

Oct 13, 2025,10:15 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 27 ம் தேதி திங்கட்கிழமை

தேய்பிறை அஷ்டமி. மாலை 06.18 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மாலை 06.39 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.39 வரை சித்தயோகமும் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெரும் தொகை கைக்கு கிடைக்கும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சியைத் தரும். கலைஞர்களின் கற்பனைத் திறன் பெருகும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பார்கள். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்கள் தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை. நெருங்கிய நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் வெளி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைஞர்களின் கனவுகள் நனவாகும். மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு சினிமா, நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாங்கிய கடனை அடைத்து இன்புறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகப் பொறுப்புகள் கூடும். மாணவர்கள் திட்டமிட்டு படிப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் தம்பதியரிடையே சண்டை வராமல் தடுக்க, வாய் வார்த்தைகளைக் குறைப்பது நல்லது. வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவார்கள். பணம் நாலாபக்கமிருந்தும் வரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவார்கள். தந்தையுடன் இணக்கமாக இருந்தால் நன்மை உண்டாகும். காதலர்களின் அன்பு பலப்படும். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் பல காரியத் தடைகள் ஏற்படும். ஆகையால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. இவர்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். இதுநாள் வரை ஏமாற்றிக் கொண்டிருந்த நபர் கையும் களவுமாக சிக்கி விடுவார். திடீர் பயணம் உற்சாகம் தரும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்கள் வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதைத் தவிர்க்க வேண்டும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு உறவினரிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவார்கள். காதலர்கள் திருமணத்துக்கு தயாராவார்கள். பணியாளர்களின் நேர்மையைக் கண்டு நிர்வாகம் உயர் பதவியைத் தரும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களுக்கு பண உதவி கிடைக்கும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பார்கள். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பெற்றோர்களது உடல் நலனை கவனிப்பது நல்லது. காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு தம்பதியரிடையே அன்பு குறையாது. குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவார்கள். பெண்கள் தங்கள் துணையிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்