தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், புரட்டாசி 01ம் தேதி புதன்கிழமை
புரட்டாசி மாதப்பிறப்பு. ஏகாதசி. சமூக நீதி நாள். அதிகாலை 03.26 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இன்று காலை 09.56 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.30 முதல் 5 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்

மேஷம் - திருமணப் பேச்சு வார்த்தையைத் தொடங்கலாம். இளைஞர்கள் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கவும். ஆக்கப்பூர்வமான வேலைகளில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் அமைதி நிலவும். வியாபாரிகள் அதிக விற்பனைக்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
ரிஷபம் - நண்பர்களுடன் நல்லுறவு மேம்படும். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மாணவர்களுக்குப் புத்தக வாசிப்பில் ஆர்வம் கூடும். உறவினர்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பங்குச் சந்தையில் பணம் போட்டவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
மிதுனம் - மாணவர்களுக்குப் புதிய விஷயங்களைக் கற்க வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளுக்குப் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணம் லாபத்தைத் தரும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.
கடகம் - சொந்த தொழில் செய்பவர்களுக்குப் பணம் வசூலாகும். தொழிலில் நிலைத்தன்மை உண்டாகும். மாணவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டாகும். காதலர்கள் குடும்பத்தை மட்டும் கவனம் கொள்வது அவசியம். தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர்.
சிம்மம் - கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து போகும். விட்டுக்கொடுப்பது அவசியம். முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வர். வாராக் கடன்கள் வந்து சேரும். உடல் நலம் சிறப்பாகும்.
கன்னி - சொந்த தொழில் செய்பவர்களுக்குச் சுமாரான முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் சீராகும். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். வழக்கு சாதகமாக முடியும். அரசு டெண்டர்களில் வெற்றி கிடைக்கும். அறுவை சிகிச்சை இல்லாமல் உடல் நலம் தேறும்.
துலாம் - மார்க்கெட்டிங் துறையினருக்கு அதிக வருவாய் கிடைக்கும். சகோதர சகோதரிகளிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வந்து போவார்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு முன்பணம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம் - குடும்பத் தலைவிகளுக்கு வீட்டில் விசேஷ நிகழ்ச்சிகள் நிகழும். உறவினர்களுடன் நல்லிணக்கம் அதிகரிக்கும். கடன் சுமைகள் குறையும். மனநிறைவு தரும் நாளாக அமையும். வியாபாரிகளின் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். உடல் நலம் மேம்படும்.
தனுசு - மூலம் நட்சத்திரக்காரர்களுக்குச் சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களைத் தவிர்க்கவும். சுபகாரியங்களைத் தள்ளி வைக்கவும். இறைவனை வேண்டுவது நல்லது.
மகரம் - நீங்கள் நினைத்த ஒரு காரியம் இனிதாக முடியும். எதிர்பார்த்த நபரை இன்று சந்திப்பீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவர். பிள்ளைகளின் வரனுக்காக அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கூட்டுத் தொழிலாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபத்தைத் தரும். உடல் நலத்தில் கவனம் தேவை.
கும்பம் - சொந்த தொழில் செய்பவர்களுக்கு விளம்பரம் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்வர். பிரிந்து சென்ற துணைவியார் திரும்பி வந்து சேருவார். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவிற்கு இடம் உண்டு. ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்குப் பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.
மீனம் - வாகன ஆர்வலர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும். வேகத்தைக் குறைப்பது நல்லது. வியாபாரத்தில் தொய்வு ஏற்படாது. லாபம் அதிகரிக்கும். பண பற்றாக்குறை நீங்கும். குடும்பத் தலைவிகள் குடும்பத்திற்காக புதிய தொழில் துவங்குவர். உடல் நலத்தில் கவனம் தேவை.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}