தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், புரட்டாசி 02ம் தேதி வியாழக்கிழமை
உலக மூங்கில் தினம். உலக தண்ணீர் கண்காணிப்பு தினம். அதிகாலை 02.09 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. இன்று காலை 09.28 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு 09.28 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்

மேஷம் - திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். தந்தை வழியில் ஆதரவு பெருகும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வர். உத்யோகஸ்தர்கள் மற்றவர்களின் விடுமுறையால் சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பெரியவர்களின் ஆசி கிட்டும்.
ரிஷபம் - ஆன்மிக சிந்தனை வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பர். வேலை தொடர்பான முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நலம் சீராகும். நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. குழந்தைகள் மகிழ்ச்சி தருவார்கள். பயணத்தில் கவனம் தேவை.
மிதுனம் - குடும்பத் தலைவிகள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வர வேண்டிய சூழல் உண்டாகும். அதனால் தங்கள் தேவைகள் பூர்த்தியடையும். நீண்ட தூர பயணத்தின் போது தாங்களே வாகனத்தை இயக்குவதாக இருந்தால் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
கடகம் - உத்யோகஸ்தர்கள் தங்கள் மேலஅதிகாரிகள் உங்களிடம் பெரிய பொறுப்புகளை தருவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவி தேவைப்படும். உடல் நலம் சிறப்படையும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். சுப காரியங்கள் தாமதமாகும்.
சிம்மம் - இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவார்கள். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். பிள்ளைகள் தங்கள் பேச்சை கேட்டு நடப்பர். வேலை தொடர்பான முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். உடல்நலம் சீராகும். பயணத்தில் நன்மை உண்டு.
கன்னி - குடும்பத்தில் சிறிய வாக்குவாதம் வந்து போகும். பண வரவு இருக்கும். வேலை தொடர்பான நன்மை உண்டு. உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களிடமிருந்து நன்மை கிடைக்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி தொடர்பான செய்திகள் வரும். வியாபாரிகளுக்கு தங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் உண்டு.
துலாம் - வழக்குறைஞர்களுக்கு பழைய வழக்குகளில் உள்ள சிக்கல்கள் தீரும். ஆன்மீகத்தில் நம்பிக்கை கூடும். மனதில் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு. குழந்தைகள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத் தலைவிகள் தங்கள் குலதெய்வத்திற்கு நேர்ந்த பிரார்த்தனைகளை முடித்துவிடுவர்.
விருச்சிகம் - எதிர்பாராத திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். இதன் மூலம் தாங்கள் நல்ல லாபத்தினை பெறுவர். பண வரவு அதிகரிக்கும். வேலை தொடர்பான நல்ல செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள் தங்களுக்கு ஆதரவு தருவார்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. உடல்நலம் சீராகும்.
தனுசு - பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
மகரம் - மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர். பெண்களுக்கு பண வரவு அதிகரிக்கும். குறிப்பாக கணினி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்களை பெறுவர். கனவுத் தொல்லை நீங்கும். நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது நல்லது.
கும்பம் - இன்று உத்யோகஸ்தர்களுக்கும் மற்றும் வியாபாரிகளுக்கும் தங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் நற்பெயர் பெற்றுத் தருவார்கள். காதலர்கள் முதலில் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. கடன் பிரச்சினை தீரும். நாணயத்தை காப்பாற்றுவீர்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும்.
மீனம் - மனதில் உற்சாகம் ஏற்படும். இன்று உங்கள் முயற்சி வெற்றியடையும். பணம் வரவு மேம்படும். குடும்பத் தலைவிகளுக்கு சேமிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தம்பதிகள் அன்யோன்யம் மேம்படும். உடல் நலத்தில் பல் வலி வந்து போகும்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}