12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 20, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 20, 2025,10:03 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 20 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், பங்குனி 06ம் தேதி வியாழக்கிழமை

தேய்பிறை சஷ்டி. இன்று நாள் முழுவதும் சஷ்டி திதி உள்ளது . இரவு 09.02 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் -  அஸ்வினி, பரணி


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  எதிலும் பதற்றமின்றி செயல்பட வேண்டும். நெருக்கமானவர்களுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். 


ரிஷபம் - உத்தியோகத்தில் உற்சாகமுடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெற்றி நிறைந்த நாள்.


மிதுனம் - எதிர்பாராத பயணங்களால் மாற்றமான சூழல் ஏற்படலாம். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். மனதில் மாற்றங்களும் பழக்க வழக்கங்களில் புதுமையும் உருவாகும். புதிய சிந்தனைகளால் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் வரவு நிறைந்த நாள்.


கடகம் - எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பண வரவுகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். துன்பம் அகலும்.


சிம்மம் - சமூக பணிகளில் இருப்பர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வேலைகளில் இருந்த இழுபறி நிலை மாறும். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் ஈடுபாடு உண்டாகும். நிறைவான நாள்.


கன்னி - லாபகரமான சூழ்நிலைகள் அமையும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்குகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுக்களை பெறுவீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை தரும்.


துலாம் -  வியாபாரத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சிரமங்கள் குறையும் நாளாக இருக்கும்.


விருச்சிகம் - மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். செல்பாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செல்படுவது நல்லது. விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லவும். அமைதி வேண்டிய நாள்.


தனுசு - ஆடம்பரமான பொருட்கள் மீது விருப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் பற்றிய நினைவுகள் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்க தெளிவு ஏற்படும்.


மகரம் - குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சேமிப்பை அதிகரிப்பது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும் நாளாக இருக்கும்.


கும்பம் -  வியாபாரத்தில் நுணுக்களை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனை விஷயங்களில் லாபங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதால் தெளிவு ஏற்படும். சமூக பணிகளில் அங்கீகாரம் கிடைக்கும்.


மீனம் -  பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். தொல்லைகள் அகலும் நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களுடன் ஒற்றுமையான சூழல் ஏற்படும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம

news

நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி

news

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!

news

தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

news

சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!

news

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?

news

வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!

news

பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு

news

ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்