12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

Sep 24, 2025,10:53 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 08 ம் தேதி புதன்கிழமை

காலை 04.19 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. இன்று மாலை 04.34 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். தம்பதிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து போனால் சண்டை வராது. உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம் கரும் - பச்சை. 


ரிஷபம் -  உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். சிறு தூர பயணம் ஏற்படும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம். 


மிதுனம் - வீட்டு தலைவிகள் ஆடை, ஆபரணங்கள் சேர்ப்பார்கள். சிலர் நகை சேமிப்பு திட்டத்தில் பணம் சேமிக்க தொடங்குவார்கள். வெளியூர் பயணத்தால் சோர்வு ஏற்படும். ஆனால் இந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.


கடகம் - வேலை செய்பவர்களுக்கு வேலைச்சுமை இருக்கும். பணத்திற்கு குறைவு இருக்காது. செலவு அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும். பூர்வீக சொத்து கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். பிடித்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்.


சிம்மம் - பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். பணம் சீராக வரும். உடல் பளபளப்பாகும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். நண்பரின் உதவி கிடைக்கும். மற்றவர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். வேலை செய்பவர்களுக்கு வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா.


கன்னி - கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் விழாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் நன்றாக படித்து முன்னேறுவார்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்து கொள்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.


துலாம் -   வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நினைத்ததை விட அதிக சம்பளம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உடலில் பொலிவும், உற்சாகமும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.


விருச்சிகம் - கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு பகுதி நேர வேலை கிடைக்கும். வேலையில் மதிப்பு கூடும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். உடல் நலம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.


தனுசு -  ஆன்மீக பயணம் செல்வீர்கள். உறவினர்களால் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் உள்ளவர்கள் நிரந்தர கம்பெனிகளுக்கு மட்டும் கடன் கொடுக்கலாம். பிள்ளைகளுக்கு படிப்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பது நல்லது. பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.


மகரம் - குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுக்காமல் இயல்பான வாழ்க்கையை புரிய வைக்கவும். முடிந்தவரை சிக்கனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை நீங்கும். உடல் நலம் மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.


கும்பம் -  கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். உயர்கல்வியில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பங்குச்சந்தை மூலம் பணம் வரும். அரசியல்வாதிகள் தங்கள் கட்சி தலைவரின் நம்பிக்கையை பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.


மீனம் - பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இன்று எல்லா காரியங்களையும் தொடங்கலாம். ஆனால், ரேவதி நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!

news

பெண் எனும் ஒளி சக்தி.. பெண் கல்வியின் மகாசக்தி.. சாவித்திரிபாய் புலே!

news

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

அதிகம் பார்க்கும் செய்திகள்