தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், கார்த்திகை 11 ம் தேதி செவ்வாய்கிழமை
இன்று அதிகாலை 03.17 வரை தசமி, அதற்கு பிறகு ஏகாதசி. அதிகாலை 04.01 வரை உத்திரம், பிறகு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்: காலை - 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - நம்பிக்கை அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நன்மையை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. முன்னேற்றம், வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம் - தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். அமைதி, பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஆன்மிக நாட்கள் அதிகரிக்கும்.
மிதுனம் - மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்ட வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தந்தையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருகு்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.
கடகம் - நம்பிக்கை, மனமகிழ்ச்சி அதிகமாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். பரிசுகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
சிம்மம் - தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள். மனம் தளறாமல் சிக்கல்களை சமாளிப்பீர்கள். பேச்சில் தெளிவும், நிதானமும் தேவை. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம். தொழிலில் உயர்வும், மகிழ்ச்சியும் இருக்கும்.
கன்னி - சில தொந்தரவுகள் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது சிறப்பு. கோபம், வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபாரத்தில் முன்னேற்றமும், லாபமும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரும்.
துலாம் - சிரமம் நிறைந்த நாளாக இருக்கும், மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்வி தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம் - சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நம்பிக்கை குறையும், பொறுமையாக செயல்பட வேண்டிய நாள். தொழில் தொடர்பாக வெளியூர் பயணம் ஏற்படலாம். பணிகளில் சாதமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு - மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும். நம்பிக்கை உடல் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றமாவ பாதை ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.
மகரம் - மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தன்னம்பிக்கை குறைந்தாலும், தளராமல் பணியாற்ற வேண்டும். கலை, இசையில் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம் - சில சிக்கல்கள், தடைகள் ஏற்பட்டு நீங்கும். கோபம், பொறுமை, கட்டுப்பாடுடன் இருக்க வேண்டிய நாள். தேவையற்ற கோபத்தை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் நிகழும்.
மீனம் - பணிச்சுமை அதிகரித்து காணப்படும். பொறுமையாக செயல்பட வேண்டிய நாள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாகன வசதியில் குறைவு ஏற்படலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}