12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 26, 2025... இன்று வரவுகள் வாசல் தேடி வரும்

Sep 26, 2025,10:29 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 10 ம் தேதி வெள்ளிக்கிழமை

காலை 08.15 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இன்று இரவு 09.37 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசி அன்பர்களுக்கு இது மகிழ்ச்சியான நாள். ஆனால், எதிர்பாராத செலவுகள் வரலாம். கையில் பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வெளியூரில் இருக்கும் கோவிலுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். அலுவலகத்தில் எல்லாம் எப்போதும் போல் இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும்.


ரிஷபம் -  ரிஷப ராசி அன்பர்களே, இது உற்சாகமான நாள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பண வரவு வர வாய்ப்பு இருக்கு. வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த உதவி நல்லபடியாக கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்வீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருக்கும். வேலையாட்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.


மிதுனம் - மிதுன ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு வர வாய்ப்பு இருக்கு. சிலருக்கு புது துணி, நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் சுப செலவுகள் வரலாம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வேலைச்சுமை குறைவதால் சந்தோஷமாக இருப்பீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும். பங்குதாரர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.


கடகம் - கடக ராசி அன்பர்களே, இன்று நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையாக இருங்க. அலுவலகத்தில் வேலைச்சுமை குறைந்து சந்தோஷமாக வேலை செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை நடக்கும். லாபமும் அதிகமாக கிடைக்கும்.


சிம்மம் - சிம்ம ராசி அன்பர்களே, உங்ககிட்ட தேவையான பணம் இருக்கும். வேலைகள் முடிய தாமதமானாலும் முடித்து விடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கோவிலுக்கு போய் சாமி கும்பிட வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் எல்லாம் எப்போதும் போல் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். விற்பனை எப்போதும் போல் இருக்கும். லாபம் எதிர்பார்த்த மாதிரி இருக்கும்.


கன்னி - கன்னி ராசி அன்பர்களே, தந்தை வழி உறவுகளால் பணம் வர வாய்ப்பு இருக்கு. குடும்ப விஷயமா முக்கியமான முடிவு எடுக்கும்போது பெரியவங்க ஆலோசனை ரொம்ப முக்கியம். சாயங்காலம் குடும்பத்தோட சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு வருவீங்க. சிலருக்கு கோவிலுக்கு போய் சாமி கும்பிட வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சந்தோஷமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல இருக்கும்.


துலாம் -   துலாம் ராசி அன்பர்களே, இது சந்தோஷமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் வரலாம். உங்க முயற்சிகளுக்கு உங்க வாழ்க்கை துணை ஒத்துழைப்பு தருவாங்க. பிள்ளைகள் ஆசைப்படுறத வாங்கி கொடுப்பீங்க. சாயங்காலம் குடும்பத்தோட சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு போவீங்க. அலுவலகத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத பணவரவு வர வாய்ப்பு இருக்கு.


விருச்சிகம் - விருச்சிக ராசி அன்பர்களே, இது கடவுள் அருள் நிறைந்த நாள். வேலைகள்ல சின்ன சின்ன தடைகள் வந்தாலும் முடிஞ்சிடும். எதிர்பாராத பணம் வர வாய்ப்பு இருக்கு. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் கொஞ்சம் பிடிவாதமா இருப்பாங்க. கொஞ்சம் விட்டு கொடுத்து போங்க. அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும் வேலையாட்களால் செலவுகளும் வரலாம்.


தனுசு -  தனுசு ராசி அன்பர்களே, எல்லா வேலையும் நல்லபடியா நடக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனா திடீர்னு செலவு வந்தா கையில இருக்கிற பணம் கரைஞ்சிடும். சொந்தக்காரங்க வந்தா வீட்ல சந்தோஷமா இருக்கும். செலவும் இருக்கும். வாழ்க்கைத்துணையால் சந்தோஷம் ஏற்படும். அலுவலகத்தில் உங்க ஆலோசனை ஏத்துக்குவாங்க. பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமா இருக்கும்.


மகரம் - மகர ராசி அன்பர்களே, எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். சிலருக்கு குடும்ப விஷயமா வெளியூர் போக வேண்டியிருக்கும். சாயங்காலம் சொந்தக்காரங்க வந்தா வீட்ல சந்தோஷம் வரும். வாழ்க்கை துணை வழியில இருக்கிற சொந்தக்காரங்களுக்காக செலவு பண்ண வேண்டி வரும். உங்க முயற்சிக்கு உங்க வாழ்க்கை துணை ஆதரவு தருவாங்க. அலுவலகத்தில் எல்லாம் எப்போதும் போல இருக்கும். வியாபாரம் எப்போதும் போல இருக்கும்.


கும்பம் -  கும்ப ராசி அன்பர்களே, அப்பா வழியில எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு பண்ண வேண்டி வரும். சிலருக்கு புது துணி, நகை எல்லாம் வாங்க வாய்ப்பு வரும். சாயங்காலம் குடும்பத்தோட கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவீங்க. அலுவலகத்தில் நீங்க எதிர்பார்த்த சலுகை இன்னைக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. வியாபாரத்தில் பங்குதாரர்களால சில சங்கடங்கள் வரலாம். ஆனா அதனால பாதிப்பு எதுவும் இருக்காது.


மீனம் - மீன ராசி அன்பர்களே, எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் வரலாம். வெளியூர் பயணம் போறத தவிர்த்திடுங்க. சொந்தக்காரங்க வந்தா சில சங்கடங்கள சமாளிக்க வேண்டி வரும். கணவன், மனைவி ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு போங்க. பிள்ளைகள் நல்லா நடந்துக்கிட்டா சந்தோஷமா இருக்கும். அலுவலக வேலையில கொஞ்சம் அதிகமா கவனம் செலுத்துங்க. வியாபாரம் சுமாராத்தான் இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல..புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? அன்புமணி ராமதாஸ்

news

நவராத்திரி சிறப்புகள்.. முப்பெரும் தேவியர் வழிபாடும், அதன் முக்கியத்துவமும்!

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றைக்கு சவரனுக்கு ரூ.320 உயர்வு

news

விஜய் பிரச்சாரம்.. கரூரில் கிடைத்தது பச்சைக் கொடி.. நாளை என்ன பேசுவார்?

news

மருந்துகளுக்கு 100 சதவீத வரி.. டிரம்ப்பின் அடுத்த அதிரடி.. இந்தியாவுக்குப் பாதிப்பு வரும்!

news

இன்று நவராத்திரி 5ம் நாள்...அலங்காரம், மலர், நைவேத்தியம் முழு விபரம் இதோ

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 26, 2025... இன்று வரவுகள் வாசல் தேடி வரும்

news

தமிழகத்திற்கு இப்போதே தேர்தல் பொறுப்பாளரை நியமித்த பாஜக.. மாஸ்டர் பிளான் என்னவோ!

news

போர்க்கொடி உயர்த்தும் கூட்டணி கட்சிகள்.. பொறுமை காக்கும் திமுக.. காத்திருக்கும் அதிமுக!

அதிகம் பார்க்கும் செய்திகள்