12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27, 2025... இன்று பாச மழையில் நனைய போகும் ராசிகள்

Sep 27, 2025,10:19 AM IST


தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 11 ம் தேதி சனிக்கிழமை

புரட்டாசி 2வது சனிக்கிழமை. உலக சுற்றுலா தினம். காலை 10.17 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இன்று முழுவதும் அனுஷம் நட்சத்திரம் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.145 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் - அஸ்வினி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - இன்று அஸ்வினி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. இன்று பல காரியத்தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.


ரிஷபம் -  நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியவர்களின் ஆசி கிட்டும். அலுவலக விஷயமாக வெளியூர் பயணம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். நண்பர்கள் கைகொடுப்பர். உடல் நலம் தேறும். அரசியலில் நாட்டம் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.


மிதுனம் - சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். பல் சொத்தை சம்பந்தமாக உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது. பல்லை பரிசோதனை செய்வது நல்லது. தேக்க நிலையில் இருந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரும். அதில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும்.


கடகம் - வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். வர வேண்டிய பணம் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு.


சிம்மம் - பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். உடல் நலம் சுகம்பெறும். பங்குச் சந்தை லாபம் தரும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர்.


கன்னி - காதலர்கள் பொறுப்புணர்வர். தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். வெளிபூர் பயணம் வெற்றி தரும். மகளுக்கு திருமணம் கூடி வரும். மாணவர்கள் வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள்.


துலாம் -   வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாள்வீர்கள். சுப நிகழ்ச்சிக்கு வித்திடுவீர்கள். இளைஞர்கள் விரும்பியவரை கைபிடிப்பர். மனைவி வழியில் நன்மை உண்டு. காதலர்களுக்கு தங்கள் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். மாணவர்கள் விரும்பிய துறையில் சேர தற்போதிலிருந்தே நன்கு படிப்பது நல்லது. உடல் நலம் தேறும்.


விருச்சிகம் - நீண்ட காலமாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு.


தனுசு -  நண்பர்கள் வகையில் உதவிகள் உண்டு. அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். தேகம் பளிச்சிடும்.


மகரம் - தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. பெண்கள் வேலையை எளிதாக்க புதிய ரக பொருட்களை உபயோகப்படுத்துவர். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.


கும்பம் -  வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். தேகம் சிறக்கும்.


மீனம் - பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அவர்களின் சந்தோஷத்திற்காக சில காரியங்களை செய்வீர்கள். இன்று சுப செலவுகள் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. எந்த காரியத்தையும் பதற்றமின்றி செய்து முடிப்பது சிறப்பு. பண விஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்