தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 28 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 15 ம் தேதி செவ்வாய்கிழமை
இரவு 08.09 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை. காலை 09.20 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 01.30 முதல் 02.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீரிடம்
இன்றைய ராசிபலன் :

மேஷம் - அலுவலகத்தில் எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உண்டு. பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணை மீதான பாசம் அதிகரிக்கும்.
ரிஷபம் - சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய மாற்றங்கள் நிகழும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் மன அழுத்தத்தில் தவிர்க்க வேண்டும். குடும்பம் மற்றும் தொழிலில் சம நிலையில் பராமரிக்க வேண்டும்.
மிதுனம் - சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். மனம் அமைதியாக இருக்கும். மனதுக்கு பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். உறவு பலப்படும். தொழில் ,வியாபாரம் சாதகமாக இருக்கும். பணம் தொடர்பாக முடிவுகள கவனமாக எடுக்க வேண்டும்.
கடகம் - தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கையில் வரும் சவால்களை சந்திக்க முடியும். தொழிலில் வெற்றி கிடைக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும்.
சிம்மம் - மற்றவர்களுடன் இருந்த பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.தொழிலில் நல்ல முடிவு எடுப்பீர்கள். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகளை தேடுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணை உடன் பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
கன்னி - உறவுகள் இடத்தில் அன்பு பாசமும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். சில பிரச்சனைகளை பேசி தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாழ்க்கை துணை உடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களின் பேச்சு மற்றவருக்கு ஆறுதலை தரும்.
துலாம் - வாழ்க்கை முறையில் மாற்றம் செய்ய வேண்டும். சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வை பெறலாம். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
விருச்சிகம் - பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். சமூகத்தில் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். உறவுகளுக்கு இடையே இனிமை அதிகரிக்கும்.
தனுசு - குடும்பத்தினருடன் ஆன்மீக தலங்களுக்கு செல்வீர்கள். அலுவலகத்தில் வேலைகள் அதிகரிக்கும். பணியில் கூடுதல் பொறுப்பு ஏற்படும். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். அன்புக்குரியவருடன் நேரத்தை செலவிட நினைப்பீர்கள். அது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
மகரம் - மனம் குழப்பமாக இருக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் .சோர்வை தவிர்க்க போதிய ஓய்வு தேவை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சவால்களால் மன அழுத்தம் ஏற்படும். சிக்கல்களை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம் - வேலையில் கவனமுடன் இருக்க வேண்டும் அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பொறுப்புகளை ஏற்க தயாராக இருங்கள். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மீனம் - செலவுகள் அதிகரிக்கும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மனம் குழப்பத்துடன் காணப்படும். ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எதையும் அதிகம் யோசிக்காமல் இருப்பது நல்லது. மன அமைதிக்காக நேரத்தை செலவிட வேண்டும். எதிலும் தெளிவான மனநிலையுடன் இருக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}