12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 29, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Jan 29, 2025,10:34 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம் :

குரோதி வருடம், தை 16 ம் தேதி புதன்கிழமை
தை அமாவாசை, திருவோண விரதம். இரவு 07.21 வரை அமாவாசை, பிறகு பிரதமை. காலை 09.20 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.35 வரை சித்தயோகம், பிறகு காலை 09.20 வரை அமிர்தயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை 
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை 
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

சந்திராஷ்டமம் - மிருகசீரிடம், திருவாதிரை

இன்றைய ராசிபலன் :




மேஷம் -  இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பொருளாதார ரீதியாக சில சிக்கல்களை சந்திக்க வேண்டி வரலாம். தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் லாபம் குறைவாகவே இருக்கும். நண்பர் ஒருவரின் உதவியால் தொழிலில் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம் - மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. வியாபாரத்திற்காக மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டி இருக்கலாம். அன்பிற்குரியவர்களின் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கும். 

மிதுனம் -    இனிமையான நாளாக இருக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம் -  நம்பிக்கை அதிகரிக்கும். அறிவு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதுரவுடன் வருமானத்தை பெருக்க முயற்சி செய்வீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

சிம்மம் -   மனம் சோர்வுடன் காணப்படுவீர்கள். ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவதால் மனதில் நிம்மதி ஏற்படும். கல்வி பணிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

கன்னி -  ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். உயர் பதவிகள் தேடி வரும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

துலாம் -   எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கை துணியிடம் பொறுமையை கையாள வேண்டும். செலவுகள் அதிகரிக்கலாம். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

விருச்சிகம் -  நம்பிக்கையுடன் செயல்பட்டு எந்த காரியத்தையும் முடிக்க வேண்டும். பணியிடத்தில் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வாழ்க்கை துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகரிக்கும். எதிர்காலத்திற்காக சேமிக்க நினைப்பீர்கள்.

தனுசு -  எதிலும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உடல் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்ல வேண்டும். பணப்புழக்கம் குறைவதால் கவலை அடைவீர்கள்.

மகரம் -  வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம். வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். இதனால் சேமிக்க முடியவில்லையே என கவலைப்படுவீர்கள். 

கும்பம் -   சோதனைகள் நிறைந்த நாளாக இருக்கும். தெய்வ வழிபாட்டின் மூலம் மன நிம்மதியை பெற வேண்டும். பணியிடத்தில் திறமைகள் வெளிப்படும். வாழ்க்கை துணையிடம் அன்பாக பேச வேண்டும். பணவரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள் உயரும்.

மீனம் -   புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கடின உழைப்பின் மூலம் முன்னேற்றம் காண வேண்டும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.   பணவரவு அதிகமாக இருந்தாலும் ச லவுகளும் அதிகரிப்பதால் கடன் வாங்க வேண்டி இருக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ப வடிவில் பிள்ளைகளை உட்கார வைத்தால்.. கழுத்து வலிக்காதா.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

news

ப வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் வைக்கும் கோரிக்கை!

news

ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

news

அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு

news

விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

news

சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

news

Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!

news

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!

news

ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்